தேசிய புத்தாக்க அறிவியல் கண்காட்சி!!

தேசிய அளவிலான புத்தாக்க அறிவியல் கண்காட்சியில், ஊட்டி அரசுப்பள்ளி மாணவன் நான்காம் இடம் பிடித்து, சாதனை படைத்துள்ளார்.

நீலகிரி மாவட்டம், ஊட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில், 10ம் வகுப்பு படிக்கும் மாணவன் அருண், நீர் நிலைகளில் உள்ள திடக்கழிவுகளை அகற்றும் வகையிலான தானியங்கி கருவியை கண்டுபிடித்து, மாவட்ட
அளவில் தேர்வாகி, மாநிலப் போட்டியில் பங்கேற்று, தங்கம் வென்றார்.

சமீபத்தில், டில்லியில் நடந்த அகில இந்திய அளவிலான போட்டியில் மாணவ, மாணவியரின், 3,100க்கும் மேற்பட்ட படைப்புகள் இடம் பெற்றிருந்தன. இதில், மாணவன் அருண், நீர் நிலைகளில் உள்ள மாசுக் கழிவுகள், தாவர வகைகள், ஆகாய, வெங்காயத் தாமரை, லில்லி, பாசி செடிகள் உட்பட திடக்கழிவுகளை அகற்றுவதுடன், நீர் நிலைகளை துார் வாரும் உபகரணத்தையும் அதோடு இணைத்து, அதை இயக்கி காண்பித்தார்.

இவரது கண்டுபிடிப்பு தேசிய அளவில் நான்காம் இடமும், அனைத்து மண்டல அளவில், முதலிடமும் பெற்றது. இவருக்கு, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், பதக்கம் மற்றும் சான்றிதழை வழங்கினார்.

மாணவனுக்கு வழிகாட்டிய அறிவியல் ஆசிரியர் சுந்தரம் கூறுகையில்,“நீர் நிலைகளில் உள்ள திடக்கழிவுளை சுத்தம் செய்யும் கருவி, குறைந்த செலவில், அதிக நேரம் உழைக்கக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சோலார் மின் சக்தி மூலம், ’ரிமோட்’ மூலம் இயக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அடுத்த தலைமுறைக்கு சுத்தமான நீர் மற்றும் நீர் நிலைகளை விட்டுச் செல்ல முடியும்,” என்றார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...