பிரதமர் மோடி கேட்டுக்கொண்டது போல ஆன்லைனில் பண பரிவர்த்தனை செய்வது எப்படி என்று உத்திரப்பிரதேச மாணவர்கள் பொது மக்களுக்கு பயிற்சி அளிக்க தொடங்கியுள்ளனர். ஒப்பந்ததாரர்கள் முதல் தொழிலாளர்கள் வரை அனைவருக்கும் பணப்பட்டுவாடா ஆன்லைன் அல்லது காசோலை மூலமாக நடைபெற வேண்டும் என்று மத்திய அமைச்சகத்துக்கும் மற்றும் அரசுத்துறைகளுக்கும் மோடி
உத்தரவிட்டிருந்தார். ஊழலுக்கு முடிவு கட்டவும், தொழில் செய்வதை எளிமையாக்கும் நோக்கத்திலும் அனைவரும் இனி ரொக்கம் இல்லா பரிவர்த்தனைக்கு மாற பிரதமர் கேட்டு கொண்டுள்ளார். மேலும் இளைஞர்கள் தான் மாற்றத்துக்கான முகவர்கள். ஒவ்வொரு இளைஞரும் 10 குடும்பங்களை ரொக்கமில்லா பரிவர்த்தனைக்கு அழைத்துவர வேண்டும் என்று கூறியிருந்தார்.
பிரதமரின் இந்த அழைப்பை ஏற்று, உத்திரப்பிரதேசத்தின் மொராதாபாத்தில் உள்ள பள்ளி மாணவர்கள் மொபைல் போன் மூலம் ரொக்கமில்லா பணபரிவர்த்தனை செய்வது எப்படி என்று பொதுமக்களுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர். இதைதொடர்ந்து ஜனவரி 1 முதல் நம் நாடு கேஷ்லெஸ் இந்தியாவாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்தியாவில் கோவா முதல் கேஷ்லெஸ் மாநிலமாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.