ரிசர்வ் வங்கிக்கு வங்கி ஊழியர்கள் கடிதம்!!!

‘நாட்டில் நிலவும் பணத்தட்டுப்பாட்டால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே தேவையான ரூ.500 மற்றும் 1000 நோட்டுகளை வங்கிக்கு அனுப்ப வேண்டும்’ என்று அனைத்து இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் ரிசர்வ் வங்கிக்கு கடிதம் அனுப்பியுள்ளது.



கருப்புப் பணத்தை ஒழிப்பதற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பழைய ரூபாய் வாபஸ் பெறப்படுகிறது என்ற அறிவிப்பை அடுத்து நாட்டில் பெரும் பணத்தட்டுப்பாடு நிலவி வருகிறது. ரூபாய் 2000 மட்டுமே கிடைப்பதால் சில்லறை மாற்ற முடியாமல் மக்கள் அவதிப்படுகிறார்கள். இதனால், பொதுமக்கள் மட்டுமின்றி, வங்கி ஊழியர்களும் அவதிப்படுகின்றனர்.

இந்நிலையில் அனைத்து இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் மற்றும் அனைத்து இந்திய வங்கி அதிகாரிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் நாகராஜன் ஆகியோர் ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேலுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

அதில் கூறியிருப்பதாவது, “பிரதமர் மோடி அறிவிப்பை அடுத்து பொதுமக்கள் தங்களிடம் உள்ள பழைய ரூபாய் 500, 1000 நோட்டுகளை வங்கிகளில் மாற்றி வருகின்றனர். போதிய ரூபாய் 100 நோட்டுகள் இல்லாத காரணத்தால் அவர்களுக்கு ரூ.2000 நோட்டுகளை மட்டும் அதிகளவு கொடுக்க நேரிடுகிறது. இதனால், வெளியில் சென்று சில்லறை மாற்ற முடியாமல் ரூபாய் 500, 100 நோட்டுகளாக கேட்கின்றனர். இதனால் வங்கி ஊழியர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. சில சமயத்தில், வங்கிகள் மீது தாக்குதல் நடத்துகின்றனர். இதனால் வங்கி ஊழியர்களுக்கு மன உளைச்சல் ஏற்படுகிறது. எனவே, வங்கிகளுக்கு கூடுதலாக ரூ.500, 100 நோட்டுகளை அனுப்ப வேண்டும்” என்று ரிசர்வ் வங்கிக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

மேலும், ‘ரிசர்வ் வங்கி அதிகமான பணத்தை தனியார் வங்கிகளுக்கே கொடுக்கிறது. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுக்குக் குறைவான பணத்தை அளிக்கிறது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது’ என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...