டிஜிட்டல்' பரிவர்த்தனைக்கு மாற ...உத்தரவு! அரசு துறைகளுக்கு நிதித்துறை சுற்றறிக்கை!!!

மத்திய அரசின் பணமில்லாத பரிவர்த்தனை திட்டத்தை புதுச்சேரி அரசு ஏற்காது என, முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ள சூழலில், அரசு துறைகளில் 'டிஜிட்டல்' பரிவர்த்தனை முறையில் செலவினங்களை மேற்கொள்ள வேண்டும் என, நிதித்துறை உத்தரவிட்டுள்ளது.





கறுப்புப்பணம், கள்ள நோட்டுகளை ஒழிக்க 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, நவ.௮ம் தேதி இரவு மத்திய அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளியாகி ௫0 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. இன்னும் வங்கிகள் மற்றும் ஏ.டி.எம் மையங்களில் மக்கள் காத்திருப்பது குறையவில்லை. ஆனால், 'கேஷ்லெஸ் எகானமி' ஆக இந்தியா மாற வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது.



மக்களிடம், ரொக்கமற்ற மின்னணு பரிவர்த்தனைகளை அதிகரிக்க வேண்டுமென, பிரதமர் நரேந்திர மோடி கூறி வருகிறார். பணமில்லா பரிமாற்றத்திற்காக புதுச்சேரியை முன்மாதிரி மாநிலமாக மாற்ற, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதனை விரைவில் அமல்படுத்த வேண்டும் என்று தலைமைச்செயலருக்கு பிரதமர் அலுவலகத்தில் இருந்து கடிதம் வந்துள்ளது.



மத்திய அரசின் பணமில்லாத பரிவர்த்தனை திட்டத்தை புதுச்சேரி அரசு ஏற்காது என, முதல்வர் நாராயணசாமி நேற்று முன்தினம் அறிவித்தார்.

இந்நிலையில், மின்னணு பணப்பரிவர்த்தனை குறித்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான பயிலரங்கம், கம்பன் கலையரங்கில் நேற்று முன்தினம் மாலை நடந்தது. இதில் பேசிய கவர்னர் கிரண்பேடி, 'நாட்டிலேயே டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையில் முதல் மாநிலமாக புதுச்சேரியை ஆக்க ஒத்துழைக்க வேண்டும்' என்றார்.



இதற்கிடையில் அரசு ஊழியர்களின் அனைத்து பணப் பரிவர்த்தனைகளையும் மின்னணு முறையிலேயே செலுத்த வேண்டும் என, புதுச்சேரி அரசின் நிதித்துறை, அனைத்து துறைகளுக்கும் சுற்றிக்கை அனுப்பி உத்தரவிட்டுள்ளது.



இது குறித்து நிதித் துறை செயலர் கந்தவேலு பிறப்பித்துள்ள உத்தரவு:

* அரசு துறைகளில் இ.சி.எஸ்., என்.இ.எப்.டி., சி.எம்.பி., ஆர்.டி.ஜி.எஸ் முறைகளில் பரிவர்த்தனை நடத்த வேண்டும்.

* அரசு ஊழியர்களுக்கான சம்பளம் இனி 'டிஜிட்டல்' முறையில் செய்யப்பட வேண்டும்.

* அரசு துறைகள் மூலம் ஒப்பந்ததாரர்கள், சப்ளையர்ஸ், நிறுவனங்களுக்கான கடன் தொகை, 5 ஆயிரம் ரூபாய்க்கு மேல் இருந்தால் அவை அனைத்தும் இனி இ.சி.எஸ்., என்.இ.எப்.டி., சி.எம்.பி., ஆர்.டி.ஜி.எஸ். முறைகளில் பரிவர்த்தனை நடத்த வேண்டும்.

* சமூக நலத் திட்டங்களுக்கான பண பரிவர்த்தனைகளும் இனி டிஜிட்டல் முறைகளிலேயே தொடர வேண்டும். மறு உத்தரவு வரும் வரை, மாற்றுத் திறனாளிகள், முடியாதவர்களுக்கு தற்போதுள்ள பணப் பட்டுவாடா முறையே தொடரும்.

* சம்பந்தப்பட்ட துறையினர் இது குறித்த பயனாளிகள் பட்டியலுக்கான பில்லை கருவூலத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.

* தன்னாட்சி நிறுவனங்கள், சொசைட்டி, வாரியம், கூட்டுறவு நிறுவனங்கள், அரசு உதவி நிறுவனங்கள் மற்றும் அரசின் உதவியுடன் இயங்கும் மற்ற சார்பு நிறுவனங்களுக்கும் இந்த பரிவர்த்தனை முறை பொருந்தும்.

மத்திய அரசின் பணமில்லாத பரிவர்த்தனை திட்டத்தை புதுச்சேரி அரசு ஏற்காது என, முதல்வர் நாராயணசாமி கூறியுள்ள சூழலில், அரசு துறைகளில் டிஜிட்டல் பரிவர்த்தனை முறையில் செலவினங்களை மேற்கொள்ள வேண்டும் என, நிதித் துறை அனைத்து துறைகளுக்கும் சுற்றிக்கை அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...