எந்தவித முன் நடவடிக்கையும் இன்றி, திடீரென்று பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது, என்று மத்திய அரசு அறிவித்ததால், தற்போது நாடு முழுவதும் பண தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
வங்கி கணக்குகளில் பணம் இருந்தாலும், அவற்றை எடுக்க முடியாமலும் மக்கள் திணறுகிறார்கள்.
நாட்டின் பல ஏடிஎம் மையங்கள் பணம் இல்லாமல் மூடப்பட்டுள்ள நிலையில், சில வங்கிகளும் வாடிக்கையாளர்களிடம் பணம் இல்லை, என்று கூறி திருப்பி அனுப்பிவிடுகிறது.
இந்த நிலையில், குஜராத் மாநிலம் சவுராஷ்டிரா பிராந்தியத்தில் அம்ரேலி, சுரேந்திரா நகர் மாவட்டங்களில் வங்கிகளில் பணம் இல்லாமல் 3 நாட்களாக மூடிக்கிடக்கிறது. நேற்று காலையில் வங்கிகள் திறந்ததும் விவசாயிகளும், வியாபாரிகளும், பொதுமக்களும் பணம் எடுப்பதற்காக திரண்டனர். ஆனால் வங்கிகளில் பணம் இல்லை என்று அதிகாரிகள் அறிவித்தனர்.
அவர்களுடன் பொது மக்களும், விவசாயிகளும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திடீர் என்று விவசாயிகள் வங்கிகளின் ஜன்னல் கதவுகளை அடித்து நொறுக்கி சூறையாடி வன்முறையில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவத்தால் குஜராத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.