வர்தா புயல் முடங்கிய வாழ்க்கை!!!

சென்ற ஆண்டு பெரு மழையில் சிக்கி, சின்னாபின்னமான சென்னைக்கு இந்த வருட சவாலாக வருகிறது வர்தா. இன்று வரப்போகும் புயல், நேற்று மாலை முதலே சென்னைவாசிகளின் வாழ்வை வீட்டுக்குள் முடக்கி விட்டது.

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள வர்தா புயல், சென்னைக்கும் ஆந்திர மாநிலத்தின் கடலோரப் பகுதியான ஓங்கோலுக்கும் இடையே கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது, அதி தீவிர புயலாக வலுவடைந்துள்ளதால் ஆந்திர, தமிழக அரசுகள் உச்சக்கட்ட
முன்னெச்சரிக்கை நடவடிக்கையை முடுக்கிவிட்டுள்ளது. இந்தப் புயலின் தாக்கம் எதிர்பார்த்ததைவிட அதிகமாக இருக்கலாம் என்பதால் நேற்று மாலை தொடங்கி அடுத்த 24 மணி நேரத்துக்கு மழையுடன் கூடிய காற்றும் இருக்கும் என்று எச்சரிக்கிறது வானிலை மையம். இன்று பிற்பகலில் இந்த புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 90 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

‘டிசம்பர் 12ஆம் தேதி வரும் புதிய புயலால் நம் இயல்பு வாழ்க்கை குழப்பமடையும்’ என்றும், ‘வர்தா’ புயலின் தாக்கத்தால் ‘மரங்கள் சாயலாம், தொலைத்தொடர்புகள் துண்டிக்கப்படலாம்’ என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதையொட்டி, எண்ணூர் துறைமுகத்தையொட்டிய சுற்று வட்டாரப் பகுதியை புயல் தாக்கும் என்பதால் 10ஆம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. (வர்தா புயலால் அதிகம் பாதிப்புள்ளாக இருக்கும் ஆந்திராவில் கிருஷ்ணப்பட்டணம் துறைமுகத்தில்கூட 3ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது). வர்தா புயல் தீவிரமடைந்து அடுத்த 12 மணி நேரத்தில் கரையைக் கடக்கவுள்ளதால் ஆந்திராவின் சூலூர்பேட்டை, கூடூர் பகுதிகளில் உச்சபட்ச எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதே மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமானது முதல் கனமழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணப்பட்டிணம் துறைமுகத்தில் 3ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. ஸ்ரீஹரிகோட்டா அருகே சூலூர்பேட்டை - சென்னை இடையே வர்தா கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் தெற்குக் கடலோரப் பகுதிகள் புயல் காற்றின் தாக்கம் இருக்கும் என்றும், புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 90 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதையடுத்து, வர்தா புயல் இன்று 12ஆம் தேதி சென்னை அருகே கரையைக் கடக்கவிருப்பதால் தனியார் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு விடுமுறை அல்லது வீட்டிலிருந்தே பணியாற்றும் அனுமதியை வழங்குமாறு தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசின் தொழில் மற்றும் வேலைவாய்ப்புத் துறை செயலாளர் பி. அமுதா வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியதாவது, ‘வர்தா புயல் எதிரொலியாக, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை மற்றும் விழுப்புரம் மாவட்டத்தின் சில தாலுகாக்களில் மழையால் பாதிப்பு ஏற்படும் நிலையுள்ளது. எனவே இதைக் கருத்தில் கொண்டு தனியார் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு 12ஆம் தேதியன்று விடுமுறை அல்லது வீட்டிலிருந்து பணியாற்றும் அனுமதியை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார். இந்நிலையில், ஐ.டி. நிறுவனங்கள் இன்று விடுமுறை விட வாய்ப்பில்லை, அதேசமயம், வீட்டிலிருந்து பணியாற்ற அனுமதி தரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வர்தா புயல் ஏற்படுத்திய பீதி நேற்று மாலை முதலே மக்களை வீட்டுக்குள் முடக்கி விட்டது, இன்று சாலையில் வாகனப் போக்குவரத்தும் மக்கள் புழக்கமும் குறைவாகவே இருக்கிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...