வட்டி விகிதம் குறைந்ததை அடுத்து மேலும் ஒரு துக்க செய்தி..!

பி.பி.எப், கிசான் விகாஸ் பத்ரா, சுகன்யா சம்ரிதி திட்டம், மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம் எனப் பல திட்டங்களின் வட்டி விகிதம் குறைகிறது.

ஒரு வாரத்திற்கு முன்பு ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் வட்டி விகிதத்தைக் குறைத்ததை அடுத்துச் சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதத்தையும் குறைக்கு மத்திய அரசு முடிவு செய்தது.

அதனால் *பிபிஎப், கிசான் விகாஸ் பத்ரா, சுகன்யா சம்ரிதி திட்டம், மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம்*எனப் பல திட்டங்களின் வட்டி விகிதம் குறைகிறது. எனவே இந்த வட்டி விகித குறைப்பு ஜனவரி-மார்ச் மாத காலாண்டில் சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதத்தில் குறையும் என்று கூறப்படுகின்றது.
 *நிதி திட்டம்*
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி ஆணையம் ஒரு வாரத்திற்கு முன்பு 2015-2016 நிதி ஆண்டிற்கான வட்டி விகிதத்தை *8.8 சதவீதத்தில் இருந்து 8.65 சதவீதமாகக் குறைத்தது. இதனால் *பிஎப் கணக்கு வைத்துள்ள 4 கோடி பயனர்கள் பாதிக்கப்பட்டனர்.*

*சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதம்*
சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதம் ஒவ்வொரு காலாண்டும் அரசின் பத்திரங்களின் வருவாயைப் பொருத்து சிறிதளவு மாறிக்கொண்டே இருக்கும். 10 வருட அரசு பத்திரங்கள் கடந்த சில ஆண்டுகளாக லாபத்தில் குறைவை சந்தித்துள்ளது.

*ஆர்பிஐ வட்டி விகித குறைப்பு*:
2015-ம் ஆண்டு முதல் பண வீக்கத்தைக் கட்டுப்படுத்த ஆர்பிஐ வங்கி ரேப்போ வட்டி விகிதத்தை 175 அடிப்படை புள்ளிகள் வரை குறைத்துள்ளது. இப்போது *மத்திய வங்கி கொண்டுவந்துள்ள ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற காரணங்களால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது*. அதே நேரம் மத்தி்ய அரசு சிறு சேமிப்பு திட்டங்களின் முதலீடுகளை அரசு பத்திரங்களில் மட்டும் முதலீடு செய்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 *தமிழ் குட்ரிட்டன்ஸ் கணிப்பு*:
வரும் காலங்களில் ஆர்பிஐ வட்டி விகிதம் சந்தை மதிப்பைப் புரட்டி போடும் அளவுக்கு இருக்கும் என்றும், *அடுத்த 12 முதல் 15 மாதங்களில் மட்டும் ஆர்பிஐ மேலும் 100 முதல் 125 அடிப்படை புள்ளிகள் வரை வட்டி விகத்தை குறைக்க நேரிடலாம்* என்று
தமிழ் குட்ரிட்டன்ஸ் கனிப்பு கூறுகின்றது.

*சேமிப்புத் திட்டங்கள்* மீதான வட்டி
கடந்த ஒரு வருடமாக ரெப்போ வட்டி விகிதம் குறையும் நிலையில் வங்கிகள் தங்களது சேமிப்புத் திட்டங்கள் மீதான வட்டியைக் குறைத்தும் வருகின்றன.
இப்போது *பிபிஎப்* போன்ற சிறு சேமிப்புத் திட்டங்கள் நீண்ட கால முதலீட்டிற்கு நல்ல லாபத்தை அளித்து வரும் நிலையில் தொடர்ந்து வட்டி விகிதம் குறிந்து வருவது இதில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...