தமிழ்ச் செம்மல்’ விருதுக்கு விண்ணப்பிக்கலாம்!!

தமிழக அரசின் ‘தமிழ்ச் செம்மல்’ விருதுக்கு 20ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த விருது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில்,
“கடந்த 2014ஆம் ஆண்டு, தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றப் பேரவை விதி 110இன் கீழ், தமிழ்நாட்டில் தமிழ் வளர்ச்சிக்கான அமைப்பு வைத்து அரும்பாடுபடும் ஆர்வலர்களை
கண்டறிந்து அவர்களின் தமிழ் தொண்டினை பெருமைப்படுத்தி, ஊக்கப்படுத்தும்விதமாக ‘தமிழ்ச் செம்மல்’ விருதை அறிவித்தார். ‘தமிழ்ச் செம்மல்’ விருது பெறுபவர்களுக்கு பரிசுத் தொகையாக ரூபாய் 25,000 மற்றும் தகுதியுரை வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.
அதன்படி, மாவட்டத்துக்கு ஒருவர் வீதம் சுமார் 32 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு விருது வழங்கப்படும். 2016ஆம் ஆண்டுக்கான தமிழ்ச் செம்மல் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.
தமிழ் வளர்ச்சித்துறையின் www.tamilvalarchithurai.com என்னும் இணையதள முகவரியில் இருந்து விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள், தங்களின் விவரம், இரண்டு புகைப்படங்கள் மற்றும் தாங்கள் ஆற்றிய தமிழ்ப்பணி ஆகிய விவரங்களை விண்ணப்பங்களுடன் இணைத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவல வளாகத்தில் உள்ள தமிழ் வளர்ச்சி துணை இயக்குநர் / தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகங்களில் 2016 டிசம்பர் 20ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல், கடந்த 2014ஆம் ஆண்டு முதல், புதிய காப்பியங்களை படைப்பவர்களுக்கு ‘இளங்கோவடிகள் விருது’ வழங்கப்படும். இளங்கோவடிகள் விருது பெறுபவருக்கு ரூபாய் ஒரு லட்சம் பரிசுத் தொகை, ஒரு சவரன் தங்கப்பதக்கம் மற்றும் தகுதியுரை வழங்கப்படும் என்று சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...