அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் திட்டமிட்டபடி நாளை நடைபெறும்: பல்கலைக்கழக பதிவாளர் அறிவிப்பு!!

சென்னை,வர்தா புயல் காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள், நூற்றுக்கணக்கான மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்ததால் மின் விநியோகம் நிறுத்தப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை

கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பல பகுதிகளில் மின் விநியோகம் சரி செய்யப்பட்டுவிட்ட போதிலும் இன்னும் பல இடங்களில் மின் விநியோகம் வழங்கப்படவில்லை.இதன் காரணமாக இன்று நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக நேற்று பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இந்த நிலையில், நாளை (வியாழக்கிழமை) நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும் திட்டமிட்டபடி நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் தெரிவித்துள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...