மதுரை ஓ.சி.பி.எம்., பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாநில அளவிலான அறிவி யல் கண்காட்சி நடந்தது.
சிவகாசி ஒய்.ஆர்.டி.வி., மெட்ரிக்., மேல்நிலைபள்ளி 11ம் வகுப்பு மாணவன் அபிஷேக்ராஜா மற்றம் 9ம் வகுப்பு மாணவன் வருண்சந்த் கூட்டாக புதிய
டெக்னாலஜியில் உருவான டூவீலரில் மாசு கட்டுப்படுத்தும் கருவி, பெண்கள் பாது காப்பு பெல்ட் போன்ற 7 மாதிரி அறிவியல் தொகுப்பினை காட்சிபடுத்தினர்.
இவை அனைத்தும் மாநில அளவில் முதலிடம் பிடித்தது. பரிசினை கல்வித்துறை அமைச்சர் பாண்டியராஜன் வழங்கினார்.
வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் திலகவதி ரவீந்திரன், முதல்வர் முரளி பாராட்டினர். அறிவியல் ஆசிரியர்கள் அந்தோ ணி பிரவீன்குமார், விக்னேஷ்ரூபன் உடனிருந்தனர்.