மாணவனைத் தாக்கிய ஆசிரியர் மீது எஃப்.ஐ.ஆர்!

சமீபகாலமாக ஆசிரியர்கள் மாணவர்களை தாக்கும் சம்பவங்களும் மாணவர்கள் ஆசிரியர்களை தாக்கும் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது.



இந்நிலையில், பாட்னாவில், ஆசிரியர் அடித்ததாகக் கூறி 9ஆம் வகுப்பு மாணவன் போலீஸில் புகார் அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாக்‌ஷ் குமார் என்னும் மாணவன் புல்வரிஷரிஃப் வால்மியில் உள்ள ஒரு தனியர் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறான். கடந்த செவ்வாய்கிழமை பள்ளி ஆசிரியர்களுள் ஒருவரான பி.கே புய்யா என்னும் ஆசிரியர் தன்னை அடித்து தண்டனை வழங்கியதாக குற்றம்சாட்டி தாக்‌ஷ் குமார். லவரிஷரிஃப் காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர் தாக்கல் செய்துள்ளான். அதில், பள்ளி நேரத்தில் ஆசிரியர் என்னை அடித்து துன்புறுத்தினார் என தெரிவித்துள்ளான்.

இந்த சம்பவம் குரித்து தாக்‌ஷ் குமார் மாமா கூறும்போது, அந்த பள்ளியில் உள்ள ஆங்கில ஆசிரியர் புய்யா, கடந்த டிசம்பர் 14 ஆம் தேதி தாக்‌ஷ்குமார் வகுப்பு நேரத்தில் சேட்டை செய்ததால், ஒரு வாரம் பள்ளிக்கு வரக்கூடாது என திட்டியுள்ளார். மேலும், அன்று பெற்றோரை அழைத்து அவர்களிடம் உங்கள் மகனைப் பள்ளிக்கு அனுப்பவேண்டாம் என கூறியுள்ளார்.

கடந்த செவ்வாய் கிழமை பள்ளியில் சேர தாக்‌ஷ் குமார் சென்றுள்ளான். அவன் தாயார் லலிதா தேவி பள்ளி முதல்வரை சந்திப்பதற்காகவும் பள்ளி கட்டணம் அளிக்கவும் தனியார் வாகனத்தில் சென்றுள்ளார். இதற்கிடையில், வகுப்பறைக்கு வெளியே தாக்‌ஷ் குமார் இருப்பதைக் கண்ட ஆசிரியர் புய்யா, மாணவனின் சட்டை காலரைப் பிடித்துக் கொடூரமாக தாக்கியுள்ளார். மேலும், ஷூவால் தாக்கியுள்ளார். இதனால், நிலைதடுமாறி கீழே விழுந்த மாணவன் வலது கையில் காயம் ஏற்பட்டது என தெரிவித்துள்ளார். ஒரு வாரம் பள்ளிக்கு வர வேண்டாம் என புய்யா கூறியபோதே தாக்‌ஷ் குமார் மன்னிப்பு கேட்டுள்ளான்.

தாக்‌ஷ் குமாருக்கு பள்ளியிலேயே முதலுதவி அளிக்கப்பட்டது.பின்னர் சிகிச்சைக்காக சாஸ்திரிநகரில் உள்ள லோக் நாயக் ஜெய்பிரகாஷ் நாராயன் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டான் என தீபக் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, புல்வரிஷரிஃப் சப்-டிவிஷனல் போலிஸ் அதிகாரி ராகேஷ் குமார், “பள்ளி தலமையாசிரியர் மாணவன் கீழே விழுந்ததால் தான் காயம் ஏற்பட்டது என எங்களிடம் தெரிவித்துள்ளார். அந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்’’ என தெரிவித்துள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...