ஜெயலலிதா மரணம் தொடர்பாக, சி.பி.ஐ விசாரணை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்த டிராபிக் ராமசாமியின் மனு கடந்த(16-12-2016) அன்று விசாரணைக்கு வந்தபோது அவர் ஆஜராகாத காரணத்தால், வழக்கு தள்ளி வைக்கப்பட்டது.
டிராபிக் ராமசாமி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதை மின்னம்பலம் செய்தியில் பதிவு செய்திருந்தோம். ஆனால், அவர் உடல் நிலை மோசமானதைத் தொடர்ந்து, இப்போது அவர், தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 15-ஆம் தேதி மயக்கமடைந்து விழுந்த அவரை நந்தனம் வெங்கடேஸ்வரா மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்கள். அவருக்கு லோ பி.பி, சிறுநீரகக் கோளாறு, உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் உள்ள நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து, அவரை மருத்துவர்கள் கவனித்து வருகிறார்கள்.