விரைவில் அமைச்சரவை மாற்றம்: செங்கோட்டையனுக்கு போக்குவரத்து துறை?

முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தனது அமைச்சரவையை மாற்றியமைக்க உள்ளாராம். செங்கோட்டையனுக்கு போக்குவரத்து துறை அளிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.



ஜெயலலிதா மறைவை அடுத்து தமக்கு அமைச்சர் பதவி வேண்டும் என்று கோபிசெட்டிப்பாளையம் எம்.எல்.ஏ. செங்கோட்டையன் முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு நெருக்கடி கொடுப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால் இதை அவர் மறுத்து அறிக்கை வெளியிட்டார்.

இந்நிலையில் பன்னீர்செல்வம் விரைவில் அமைச்சரவையை மாற்றியமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய அமைச்சரவையில் செங்கோட்டையனுக்கு போக்குவரத்து துறை அளிக்கப்பட உள்ளதாம்.

அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வசம் இருக்கும் பொதுப்பணித்துறையை தான் செங்கோட்டையனுக்கு அளிக்க முடிவு செய்து பின்னர் விஜயபாஸ்கரிடம் இருக்கும் போக்குவரத்து துறையை கொடுக்கிறார்களாம்.





சுகாதாரத் துறை அமைச்சராக இருக்கும் விஜயபாஸ்கருக்கு கூடுதலாக ஒரு துறை அளிப்பது குறித்து ஆலோசனை நடந்து வருகிறதாம். முன்னதாக 1991-96ல் ஜெயலலிதா முதன்முதலாக முதல்வர் ஆனபோது அவர் செங்கோட்டையனுக்கு போக்குவரத்து துறையை அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...