அழகப்பா பல்கலை மாணவர்கள் சாதனை!!!

 உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, புலியடிதம்மம் புனித குவனெல்லா அன்பகம் சிறப்பு பள்ளியில் நடந்த மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு போட்டியில், அழகப்பா பல்கலை மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு பயிற்சி மைய வீரர்கள் வெற்றி பெற்றனர்.




சிவராஜன் 100 மீட்டர் ஓட்ட போட்டியில் முதலிடமும், இசை நாற்காலி போட்டியில் இரண்டாம் இடமும், ஆர்.எம்.ராமையா 50 மீட்டர் ஓட்ட போட்டியில் முதலிடமும், இசை நாற்காலி போட்டியில் முதலிடமும், 100 மீட்டர் ஓட்ட போட்டியில் சி.முருகானந்தம் இரண்டாம் இடமும், 100 மீட்டர் ஓட்ட போட்டியில் செல்வராஜ் மூன்றாம் இடமும், 50 மீட்டர் ஓட்ட போட்டியில் சபரிநாதன் மூன்றாம் இடமும், பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்ட போட்டியில் சிவகவி முதல் இடத்தையும் பெற்றார்.

இவர்களை துணைவேந்தர் சுப்பையா, உடற்கல்வியியல் கல்லுாரி முதல்வர் சுந்தர், பயிற்றுனர் சுந்தர், தமிழ்நாடு பாராலிம்பிக் விளையாட்டு சங்க தலைவர் ரஞ்சித்குமார் பாராட்டினர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...