நீதிமன்றங்களில் தேசிய கீதம் ஒலிபரப்ப வேண்டும் என கோரி மனு: விசாரணைக்கு ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!!!

டெல்லி, நீதிமன்றங்களில் தினமும் வழக்கு விசாரணைகள் துவங்கப்படும் முன் தேசிய கீதம் ஒலிபரப்பப்பட வேண்டும் என்று தொடரப்பட்ட மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.திரையரங்குகளில் சினிமா திரையிடுவதற்கு முன் தேசிய கீதம் கட்டாயம் ஒலிபரப்ப வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு

பிறப்பித்து உள்ளது.திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்க உத்தரவிட வேண்டும் என ஷியாம் நாராயண் சவுக்சி என்பவர்  தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவினை பிறப்பித்தது.இந்த நிலையில், நீதிமன்றங்களிலும் வழக்கு விசாரணைக்கு முன் தேசிய கீதம் இசைக்க வேண்டும் என்று பாரதீய ஜனதா கட்சி பிரமுகரும் வழக்கறிஞருமான அஷ்வானி குமார் மனு தாக்கல் செய்தார். இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள், தீபக் மிஸ்ரா, அமித்வா ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்  தனது  மனுவை உரிய முறையில் சமர்பிக்க வேண்டும் என்று மத்திய அரசின் அட்டார்னி ஜெனரல் தெரிவித்தார்.  இதையடுத்து மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், மனுதாரர் அட்டார்னி ஜெனரலிடம் உதவி பெறுமாறு தெரிவித்தது

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...