மத்திய அரசின் செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்புக்கு பின், கறுப்புப் பண பதுக்கலிலும், முறைகேட்டிலும் ஈடுபடுவோருக்கு எதிராக, சி.பி.ஐ., மற்றும் வருமான வரித் துறை அதிகாரிகள், தீவிர வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் நடந்த வேட்டையில், இரண்டு கோடி ரூபாய் செல் லாத நோட்டுகளை மாற்றித் தந்த, ரிசர்வ் வங்கி ஊழியர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.
கறுப்புப் பணத்தை ஒழிக்கும் வகையில், பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல் லாது என, கடந்த மாதம், 8ல், பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.
இந்த அறிவிப்புக்கு பின், கறுப்புப் பண முதலை கள் பலரும், தாங்கள் வைத்திருந்த செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்றும் வகையில் முறைகேட்டில் ஈடுபட்டனர். இவர்களுக்கு, வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் சிலர் உதவு வதாகவும் புகார் எழுந்தது.
இதையடுத்து, சி.பி.ஐ., மற்றும் வருமான வரித் துறை அதிகாரிகள், நாடு முழுவதும் அதிரடிச் சோதனை நடத்தி வருகின்றனர். இதில், கட்டுக் கட்டாக பணத்தை பதுக்கி வைத்திருந்த பலர் கைது செய்யப்பட்டனர். கணக்கில் காட்டாத பல கோடி ரூபாய், கைப்பற்றப்பட்டது. இந் நிலையில், நேற்றும், பல இடங்களில் சோதனை நடந்தது.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள ரிசர்வ் வங்கி கிளை ஊழியர்கள் சதானந்தா நாயகா, ஏ.கே.கவின், சில வங்கி ஊழியர்களுடன் கூட்டு சேர்ந்து, செல்லாத ரூபாய் நோட்டு களுக்கு பதில், புதிய நோட்டுகளை மாற்றித் தரும் மோசடியில் ஈடுபட்டனர்.
இந்த இருவரும், 1.99 கோடி ரூபாய் மதிப் புள்ள, செல்லாத நோட்டுகளை மாற்றித் தந் துள்ளனர். இதையடுத்து, இந்த இருவரையும், ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ், சி.பி.ஐ., அதிகாரி ,
கள் கைது செய்துள்ளனர். பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்ட இருவரையும் 4 நாள் சி.பி.ஐ., காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
பெங்களூரில், செல்லாத, 6 லட்சம் ரூபாயை மாற்றித்தந்ததாக, சமீபத்தில், ரிசர்வ் வங்கி ஊழியர் ஒருவரை, சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர். இந்நிலையில், மேலும் இருவர், சி.பி.ஐ., வேட்டை யில் பிடிபட்டுள்ளது, பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.
ஹரியானாவில் ரூ.10 லட்சம்
ஹரியானா மாநிலத்தின் குருஷேத்திரா நகரில், வெளிநாட்டு கரன்சிகளை மாற்றித் தரும் நிறு வனம் ஒன்றில் நடந்த சோதனையில், 10 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிய, 2,000 ரூபாய் நோட்டுகள் சிக்கின.
ஆந்திராவிலும் அதிரடி
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில், நான்கு பேரின் வீடுகளில் நடந்த சோதனைகளில், கணக் கில் வராத, 4.4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, புதிய, 2,000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
ரயில்வே அதிகாரி
மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில், சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில், வர்த்தக மேலாளராக பணியாற்றும் போயர் என்பவர், செல்லாத நோட்டு களுக்கு பதில், 8.22 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, புதிய நோட்டுகளை மாற்றித் தந்தது கண்டுபிடிக்கப் பட்டது.
ரூ.400 கோடி சொத்து
குஜராத் மாநிலம் சூரத்தில், செல்லாத நோட்டு களை, கமிஷனுக்கு மாற்றித் தந்த, பைனான்சியர், கிஷோர் பாஜியாவாலாவிடம் இருந்து, 1.33 கோடி ரூபாயை, வருமான வரி அதிகாரிகள் கைப்பற்றி னர். அதில், 95 லட்சம் ரூபாய், புதிய, 2,000 ரூபாய் நோட்டுகள். மீத பணம், 20, 50, 100 ரூபாய் நோட்டு களாக பறிமுதல் செய்யப்பட்டன.
கிஷோரிடம் இருந்து, ஏழு கோடி ரூபாய் மதிப் புள்ள தங்க நகைகளும், 72 லட்சம் ரூபாய் மதிப் புள்ள வெள்ளி பொருட்களும் கைப்பற்றப்பட்டன. அவர் வீட்டில் நடந்த அதிரடிச் சோதனையில், 400 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து பத்திரங்களும் பிடிபட்டன.
சிக்கியது ஆக்சிஸ் வங்கி
டில்லி அருகேயுள்ள நொய்டா நகரில், ஆக் சிஸ் வங்கியில், தனிநபர் ஒருவரின் அடையாள
விபரங்களை பயன்படுத்தி, பெரியளவில், சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்துள்ளது.
நொய்டாவைச் சேர்ந்த, பாஸ்வான் என்பவர், தன் அடையாள விபரங்களை பயன்படுத்தி, ஆக்சிஸ் வங்கியில், சேமிப்பு மற்றும் நடப்புக் கணக்குகள் ஆரம்பிக்கப்பட்டதாகவும், அவற் றின் மூலம், பல கோடி ரூபாய், செல்லாத நோட்டுகள் மாற்றப்பட்டு, மோசடி நடந்ததாக வும் புகார் அளித்தார்.
இது தொடர்பாக, சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தில், அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வரு கிறது. குற்றம் சாட்டப்பட்டுள்ள அந்த வங்கி யில், போலி கணக்குகள் துவங்கப்பட்டு, 60 கோடி ரூபாய் பணம் மாற்றப்பட்டதாக, ஏற்க னவே வழக்கு பதிவாகி விசாரணை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
தையல் கடையில் தங்கம் பறிமுதல்
பஞ்சாப் மாநிலம் மொகாலியில் உள்ள பிர சித்தி பெற்ற, 'மஹாராஜா' தையல் கடையில், கறுப்புப் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக, அமலாக்கத் துறையினருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து, அதிகாரிகள், அந்த கடையில் அதிரடிச் சோதனை நடத்தினர். ஆவணங்களை சோதனை செய்தபோது, தங்கம் வாங்கியதற் கான ரசீதுகள் சிக்கின.
இதைத் தொடர்ந்து, அந்த தையல் கடையின் மற்றொரு கிளை அமைந்துள்ள, சண்டிகரி லும் சோதனை நடந்தது; அங்கு, 2.5 கிலோ தங்கமும், 30 லட்சம் ரூபாய் பணமும் சிக்கி யது. பறிமுதல் செய்யப்பட்ட பணத்தில், 19 லட்சம் ரூபாய், புதிய, 2,000 ரூபாய் நோட்டு கள். தையல் கடை உரிமையாளர், கறுப்புப் பணம் பதுக்கும் கும்பலுக்கு, பழைய நோட்டு களை மாற்றிக் கொடுத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.