கோடையில் பரவும் சின்னம்மைக்கு பிப்ரவரியில் தடுப்பூசி!

தமிழகத்தில் அதிகளவில் பரவி வரும், ரூபல்லா தட்டம்மை வைரஸ் நோயை கட்டுப்படுத்துவதற்கு பிப்ரவரி முதல் புதிய தடுப்பூசி அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

பொதுவாக வெயில் காலத்தில் குழந்தைகளை தட்டம்மை, சின்னம்மை நோய் தாக்கும் அபாயம் அதிகளவில்
உள்ளது. தட்டம்மை நோய் வேர்க்குரு போல் உடல் முழுவதும் சின்ன சின்னதாகத் தோன்றும். இதனால் ஜூரம், இருமல், சளி, கண்ணில் நீர் வடிதல் போன்ற அறிகுறி இருக்கும். இந்த நோயைத் பரப்பும் கிருமிகள்மிகவும் நுட்பமானவை. ஒரு குழந்தைக்கு ஏற்படும் இந்த வைரஸ் காற்று மூலம் அந்த பகுதி முழுவதும் உள்ள குழந்தைகள் பலரையும் பாதிக்கும்.

இந்நிலையில், சமீபகாலமாக, நம் நாட்டில், 'மீசல்ஸ் ரூபல்லா' வைரஸ் பரவி வருகிறது. இந்த வைரஸ் தட்டம்மை வைரஸ் வகையை சேர்ந்தது. எனவே இதைகட்டுப்படுத்த, ஒன்பது மாத குழந்தை முதல் 15 வயதினர் வரை, தடுப்பூசி போட, உலக சுகாதார நிறுவனம அறிவுறுத்தியுள்ளது.

இதற்கானத் தடுப்பூசி, வரும் பிப்ரவரி மாதம் அறிமுகப்படுத்தப்படுகிறது. முதல் வாரம் பள்ளிகளிலும், இரண்டாம் வாரம் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும்,கடைசி வாரம் விடுபட்டோருக்கும் தடுப்பூசி போட அறிவுறுத்தப்பட்டது.

இதற்கான ஆலோசனை கூட்டம், சென்னையில் நடந்தது. இதில், சுகாதாரத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர். அப்போதுசுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: ’இருமல், தும்மல் ஏற்படும்போது, காற்று மூலம், வைரஸ் பரவும். இளம்பெண்களை தட்டம்மை அதிகமாக தாக்கும்.இந்நோய் பாதிப்புக்கு உள்ளாகும் கர்ப்பிணிகளுக்கு, பிறவி குறைபாடுகளுடன் குழந்தை பிறக்க வாய்ப்புள்ளது. எனவே, இதுபோன்ற தாக்கத்தைக் கட்டுப்படுத்த,தடுப்பூசி அறிமுகம் செய்யப்பட உள்ளது. அரசு டாக்டர்களுக்கு உலக சுகாதார நிறுவன பிரதிநிதிகள் பயிற்சி அளித்து வருகின்றனர்’ என தெரிவித்துள்ளனர்.

வீட்டில் ஒருவருக்கு அம்மை வந்தால், நம் முன்னோர்கள் வீட்டு வாசலில் வேப்பிலையைக் கட்டுவர். இதன் மூலம் நோய்க்கிருமிகள் காற்று மூலம் பரவுவதைத்தடுக்க முடியும். வேப்பிலை சிறந்த கிருமி நாசினி. அம்மை நோயால் பாதிக்கப்படாமல் இருக்க அடிக்கடி தண்ணீர், பழச்சாறு, மோர், இளநீர் போன்றவற்றை அருந்தவேண்டும். சுகாதாரமான உடையை உடுத்த வேண்டும். சாப்பிடுவதற்கு முன் கைகளை சுத்தமாக கழுவ வேண்டும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...