இஃபோதைக்கு தீராது பண நெருக்கடி: புள்ளி விவரத்தோடு சி.பி.கிருஷ்ணன்!

‘தற்போது ஏற்பட்டிருக்கும் நிதி நெருக்கடி நிலையை மத்திய அரசால் சமாளிக்க முடியாது’ என்று புள்ளி விவரங்களோடு விளக்கியிருக்கிறார் இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம், தமிழ்நாடு பிரிவின் பொதுச் செயலாளர் சி.பி. கிருஷ்ணன். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது, “புதிய ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பதற்காக பாரதிய ரிசர்வ் பேங்க் நோட் முத்ரன் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் ரிசர்வ்

வங்கியால் 1995 பிப்ரவரி 3ஆம் தேதி ஏற்படுத்தப்பட்டது. பெங்களூரு நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்நிறுவனம், மைசூர் மற்றும் மேற்கு வங்க மாநிலம் சல்போனியில் ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் இரண்டு அச்சகங்களை நிர்வகிக்கிறது. இந்த இரு அச்சகங்களும் வருடத்துக்கு ரூபாய் தாள்கள் எண்ணிக்கையில் 1,600 கோடி அளவுக்கு அச்சடிக்கும் திறமை வாய்ந்தவை. இவை தவிர மகாராஷ்டிர மாநிலம் நாசிக், மத்தியப்பிரதேசம் மாநிலம் தேவாஸ் ஆகிய இடங்களிலும் ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் அச்சகங்கள் உள்ளன. இவை இரண்டும் மொத்த ரூபாய் தாள்களின் தேவையில் 40 சதவிகிதம் அச்சடிக்கும் திறன் வாய்ந்தவை. இந்த நான்கு அச்சகங்களும் இரண்டு ஷிப்டுகள் மூலம் வருடத்துக்கு 2,666 கோடி அளவுக்கு அச்சடிக்கும் திறன்படைத்தவை. மத்திய அரசு வழங்கிய புள்ளி விவரப்படி கடந்த மாதம் 8ஆம் தேதி புழக்கத்தில் இருந்த ரூபாய் நோட்டுகளின் மதிப்பு ரூபாய் 17 லட்சத்து 54 ஆயிரம் கோடி. இதில் 45 சதவிகிதம் ரூபாய் 500 நோட்டுகள். இதன் மதிப்பு ரூபாய் 7 லட்சத்து 89 ஆயிரம் கோடி. இது எண்ணிக்கையில் 1,578 கோடி தாள்கள். மேலும், 39 சதவிகிதம் ரூபாய் 1000 நோட்டுகள். இதன் மதிப்பு ரூபாய் 6 லட்சத்து 84 ஆயிரம் கோடி. இது எண்ணிக்கையில் 684 கோடி தாள்கள். ரூபாய் 1000 நோட்டுகளுக்கு பதிலாக ரூபாய் 2000 நோட்டுகள் 342 கோடி தாள்கள் அச்சடித்தாலே போதுமானது. மத்திய அரசு புதிய ரூபாய் 2000 நோட்டுகளை அச்சடிக்கும் பணியை செப்டம்பர் மாதமே தொடங்கி விட்டதாக கூறுகிறது. அதன்படி ஏறக்குறைய இரண்டு மாத காலத்தில் அப்பணி நிறைவடைந்திருக்கும். நான்கு அச்சகங்களின் திறன் வருடத்துக்கு 2,666 கோடி தாள்கள். மூன்று ஷிப்டுகளில் பணிபுரிந்தால் இதன் திறன் 4 ஆயிரம் கோடி தாள்களாக உயரும். இதில் 20 சதவிகித திறன் 10 ரூபாயில் இருந்து 100 ரூபாய் நோட்டுகள் வரை அச்சடிக்க பயன்படுத்தப்படும். மீதமுள்ள 80 சதவிகிதம் ரூபாய் 500 நோட்டுக்கள் அச்சடிப்பதற்காக பயன்படுத்துவதாக எடுத்துக் கொண்டால் இதனை அச்சடிப்பதற்கான திறன் வருடத்துக்கு 3,000 கோடி தாள்களாகும். புழக்கத்தில் இருந்து செல்லாத தாக்கப்பட்ட ரூபாய் 500 நோட்டுகளின் எண்ணிக்கை 1,578 கோடி தாள்கள். இதில் சுமார் 20 சதவிகிதம் வரை கருப்புப் பணமாக இருக்கும் என்றும், அந்தப் பணம் வங்கிகளுக்கு வராது என்றும் கூறப்படுகிறது. அதை அப்படியே ஏற்றுக்கொண்டால் அந்த அளவுக்கு புதிய ரூபாய் 500 நோட்டுகள் அச்சடிப்பதைக் குறைத்துக் கொள்ளலாம். இதன்படி 20 சதவிகிதத்தை கழித்தால் 1,262 கோடி தாள்கள் அச்சடிக்கப்பட வேண்டும். ஆனால், ரூபாய் 1000 நோட்டுகள் முற்றிலுமாக நீக்கப்பட்டதால் குறைந்தபட்சம் அதில் 25 சதவிகிதமாவது புதிய ரூபாய் 500 நோட்டுக்களாக புழக்கத்தில் வந்தால்தான் நிலைமை சகஜமாகும் என்றும் ஒரு கணிப்பு உள்ளது. அவ்வாறெனில் கூடுதலாக 342 கோடி தாள்கள் அச்சடிக்கப்பட வேண்டும். இதன்படி மொத்த தேவையாக 1,604 கோடி எண்ணிக்கையில் ரூபாய் 500 நோட்டுகள் அச்சடிக்கப்பட வேண்டும். இவற்றை அச்சடிக்க ஆறு மாத காலமாகும். நவம்பர் மாதம் முதல் வாரத்திலேயே இப்பணி தொடங்கப்பட்டிருந்தாலும் தேவையான அளவு ரூபாய் 500 நோட்டுகளை அச்சடித்து முடிக்க 2017 ஏப்ரல் இறுதியாகும். எனவே மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் கூறுவது போல் 50 நாட்களில் ரூபாய் தட்டுப்பாடு தீர்வதற்கான வாய்ப்பில்லை. இதனால் ரூபாய் தட்டுப்பாட்டைத் தீர்க்க விரைந்து மாற்று ஏற்பாடுகள் செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...