அதிமுகவுக்கு தலைமையேற்கும்படி, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவிடம், கட்சியின் மூத்த நிர்வாகிகள் வலியுறுத்தியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
போயஸ் தோட்ட இல்லத்தில் சசிகலாவை இன்று மதியம் நேரில் சந்தித்து அதிமுக நிர்வாகிகள் இந்த கோரிக்கையை வைத்திருப்பதாக அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன.
ஜெயலலிதாவின் வழியில் அதிமுகவை நடத்தி, கழகத்தின் மையப் புள்ளியாகச் செயல்பட வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும் தொலைக்காட்சிச் செய்திகள் தெரிவிக்கின்றன.
அதிமுகவுக்கு அரணாக இருந்து தலைமையேற்கும்படி, கட்சியின் மூத்த நிர்வாகிகளான மதுசூதனன், செங்கோட்டையன், சைதை துரைசாமி உள்ளிட்டோர் நேரில் வலியுறுத்தியுள்ளனர்.
கட்சியின் 44 ஆண்டு கால பாரம்பரியத்தைக் காக்க, அதிமுகவின் தலைமைப் பொறுப்பை சசிகலா ஏற்க வேண்டும் என்றும், இதன் மூலம் தேவையற்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள் என்றும் அதிமுக நிர்வாகிகள் குறிப்பிட்டுள்ளனர்.