தருமபுரி அருகே கமிஷன் அடிப்படையில் ரூபாய் நோட்டுகளை மாற்றும் கும்பலை சேர்ந்த மூன்று தரகர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
பென்னாகரம் பகுதியை சேர்ந்த மதி, பிரபு,செல்வக்குமார் ஆகிய மூவரும் ஓசூரிலிருந்து சொகுசு கார் மூலம் பழைய 500 ரூபாய் நோட்டுகள் 32 லட்ச ரூபாயின் கமிஷன் அடிப்படையில்
மாற்றி செல்வதற்காக காரிமங்கலம் பகுதியிலுள்ள தனியார் ஓட்டலுக்கு வந்துள்ளனர்.
அங்கு புதிய 2000 ரூபாய் நோட்டுகளுடன் தங்கியிருந்த கரூரை சேர்ந்த கும்பலிடம் பணத்தை கொடுத்து மாற்றும்போது, கமிஷன் தொகை தொடர்பாக இருபிரிவினரிடமும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து அப்பகுதியிலுள்ள கடைக்காரர் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். இதையடுத்து, விரைந்து வந்த போலீசார் மூவரை கைது செய்துனர். மேலும் அவர்கள் பயன்படுத்திய 2 சொகுசு கார்கள், இருச்சக்கர வாகனம், புதிய 2000 ரூபாய் கட்டுகள் கொண்ட 20 லட்சத்து 60 ஆயிரமும், பழைய 500 ரூபாய் நோட்டுகள் மற்றும் கத்தி, வீச்சரிவாள் உட்பட ஆயுதங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.