மும்பை விமான நிலைய பெயர் திடீர் மாற்றம்!

மும்பை சர்வதேச விமான நிலையத்தின் பெயர், ‘சத்ரபதி சிவாஜி மஹாராஜ் விமான நிலையம்’ என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது.

மேலும், ஓய்வில்லாமல் இயங்கிக்கொண்டிருக்கும் சி.எஸ்.டி. ரயில் நிலையம், ‘சத்ரபதி சிவாஜி மஹாராஜ் ரயில் நிலையம்’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


கடந்த 1995ஆம் ஆண்டு முன்பு வரை மும்பை சர்வதேச விமான நிலையம், சாகர் விமான நிலையம் என அழைக்கப்பட்டது. ரயில் நிலையம் விக்டோரியா ரயில் நிலையம் என அழைக்கப்பட்டது. ஆனால், பாஜக கட்சி ஆட்சிக்கு வந்தபிறகு, நாட்டில் உள்ள புகழ்பெற்ற இடங்களின் பெயர்கள் மாற்றப்பட்டு வருகிறது. உதாரணமாக, கடந்த ஏப்ரல் மாதம் ஹரியானா அரசு, குர்கான் எனும் பெயரை 'குரு துரோணாச்சாரியார்' நினைவாக 'குருகிராம்' என பெயர் மாற்றம் செய்தது.

கடந்த 2014ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கர்நாடகாவின் பன்னிரண்டு நகரங்களின் பெயர் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, பெங்களூர் -பெங்களூரு எனவும், மங்களூர் - மனக்ளூரு எனவும், மைசூர் - மைசூரு என கன்னட உச்சரிப்புடன் மாற்றம் செய்யப்பட்டன.

இந்நிலையில், குஜராத்தின் அகமதாபாத் நகரை ‘கர்ணாவதி’ என்றும், தெலங்கானாவின் ஹைதராபாத் நகரை, ‘பாக்யா நகர்’ என்றும், மகாராஷ்டிராவின் அவுரங்காபாத், ‘சாம்பாஜி நகர்’ என்றும் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என ஆர்எஸ்எஸ் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பின்பு, எல்லா இடங்களிலும் இந்துத்துவ கருத்துகளையும் பெயர்களையும் முன்னிறுத்த வேண்டும் என்று திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. அதற்கு ஏற்ப பல பல்கலைக்கழகங்களில், பாஜகவை ஆதரிக்கும் நபர்களே முதல்வர்களாக, துணைவேந்தர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், பல நூறு ஆண்டுகளாக இருக்கும் நகரங்களின் பெயர்களை மாற்றுவது அநீதி என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...