'புகை பிடிக்கும், மது அருந்தும் பெண்களின் சதவீதம் அதிகரித்து வருகிறது. வேதங்கள் குறிப்பிடும் கலிகாலத்தையே இது காட்டுகிறது' என ஐகோர்ட் கிளை நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார். தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே மறவர்காட்டை சேர்ந்த பழனிவேலு மகள் பவித்ரா (20).
நர்சாக பணியாற்றி வருகிறார். இவர் அப்பகுதியை சேர்ந்த 17 வயதான மைனர் சிறுவனுடன் ஓட்டம் பிடித்தார். இதுகுறித்து மதுக்கூர் போலீசார் பவித்ரா, பழனிவேலு, இவரது மனைவி மாரியம்மாள் ஆகியோர் மீது கடத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கில் தங்களுக்கு முன்ஜாமீன் கேட்டு 3 பேரும் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தனர்.
மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவு:
தற்போது பெண்களே தங்களது வாழ்க்கை துணையை தேடிக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. வெறும் முக அழகில், வசீகரத்தால் சிறுவன் என்று கூட பார்க்காமல் செல்லும் நிலை உள்ளது. வேதங்கள் குறிப்பிடும் கலிகாலத்தையே இது காட்டுகிறது. பெண்களை கூட்டிக்கொண்டு ஆண்கள் சென்ற நிலை மாறி, ஆண்களை, பெண்கள் கூட்டி செல்லும் நிலைக்கு வந்துவிட்டது. தற்போது புகை பிடிக்கும், மது அருந்தும் பெண்களின் சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த வழக்கை பொறுத்தவரை சிறுவன் மீட்கப்பட்டுள்ளார். எனவே, 3 பேருக்கும் முன்ஜாமீன் அனுமதிக்கப்படுகிறது. மறு உத்தரவு வரும்வரை சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷனில் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.