முதல்மறையாக இரண்டு ஊடகவியளாலா்கள் மருத்துவமனைக்குள் அனுமதி ??!

தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் அது குறித்து வெளி வரும் செய்திகள் மக்களிடையே பீதியை அதிகரித்து விடக்கூடாது. தமிழகத்தின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு வரக்கூடாது என்று தமிழக அரசு வட்டாரமும், அ.தி.மு.க மேலிடமும் கருதியதாகத் தெரிகிறது.



*இதையடுத்து இரண்டு முக்கிய தொலைகாட்சி சேனல்களின் ஆசிரியர்களை அப்போலோ வரும் படி அ.தி.மு.க தலைமை அழைத்திருக்கிறது. இதையடுத்து தந்தி தொலைகாட்சியின் செய்தி ஆசிரியர் ரங்கராஜ் பாண்டே, புதிய தலைமுறை தொலைகாட்சியின் நிர்வாக ஆசிரியர் கார்த்திகை செல்வன் இருவரும் நேற்று நள்ளிரவு அப்போலோ அழைத்து வரப்பட்டனர்*

*அவர்களிடம் அ.தி.மு.க வட்டாரத்தின் சார்பிலும், மருத்துவமனை வட்டாரத்தின் சார்பிலும் முதல்வருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாகத்தான் முதல்வருக்கு ஆஞ்சியோ செய்யப்பட்டிருக்கிறது என்ற தகவலும், தொடர்ந்து முதல்வர் உடல் நிலை சீராக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. ரத்த நாள அடைப்பை சரி செய்ய முயற்சி மேற்கொண்டதாகவும், 24 மணி நேரம் கழித்துத்தான் முதல்வர் உடல் நிலையில் அடுத்த கட்ட முன்னேற்றம் குறித்து தெரிய வரும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது*

*முதல்வர் உடல் நலம் பிரார்த்திப்போம்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...