பொங்கலை முன்னிட்டு, வரும், 13ம் தேதி, ரேஷன் கடைகளுக்கு விடுமுறை கிடையாது.
தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு, மாதத்தின் முதல் மற்றும் இரண்டாவது
ஞாயிற்றுக்கிழமை, வேலை நாள். அதற்கு பதில், அந்த வார வெள்ளிக் கிழமைகளில் ரேஷன்
கடைகளுக்கு விடுமுறை. ஆனால், இம்மாதத்தின் இரண்டாம் வெள்ளியான, வரும், 13ல், ரேஷன் ஊழியர்களுக்கு விடுப்பு கிடையாது என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து, உணவுத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ரேஷன் கடைகளில், உள் தாள் ஒட்டும் பணி நடக்கிறது. விரைவில், பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகமும் துவங்க உள்ளது. எனவே, மக்கள், அந்த பொருட்களை வாங்க சிரமப்படக் கூடாது என்பதால், இரண்டாவது வெள்ளிக்கிழமை, ரேஷன் கடைகள் திறக்கப்படும். அதற்கு பதிலாக வேறு ஒருநாள், ஊழியர்களுக்கு விடுப்பு வழங்கப்படும். இதற்கான அறிவிப்பை, கூட்டுறவு மற்றும் உணவு அமைச்சர்கள், விரைவில் வெளியிடுவர். இவ்வாறு அவர் கூறினார்.