வாஷிங்டன், டிரம்ப் வெற்றியை அமெரிக்க பாராளுமன்றம் உறுதி செய்தது. அதை தொடர்ந்து 20-ந் தேதி அவர் அதிபர் பதவி ஏற்கிறார்.அமெரிக்காவில் கடந்த நவம்பர் 8-ந் தேதி அதிபர் தேர்தல் நடந்தது. அதில் குடியரசு கட்சியை சேர்ந்த கோடீசுவரர் டொனால்டு டிரம்ப் எதிர்பாராத வகையில் வெற்றி பெற்றார். ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் அதிர்ச்சி தோல்வி
அடைந்தார்.குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் வெற்றி பெறுவதற்கு ரஷியா நேரடியாக தலையிட்டது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக, ‘ரஷிய அரசுடன் தொடர்புடையவர்கள், ஹிலாரியின் ஜனநாயக கட்சி தேசிய குழு மற்றும் ஹிலாரி பிரசார குழு தலைவர் பிரசாரம் தொடர்பான ஆயிரக்கணக்கான இ–மெயில்களை இணையதளத்தில் திருட்டுத்தனமாக புகுந்து திருடி, விக்கி லீக்ஸ் இணையதளத்தின் மூலம் கசிய விட்டனர். ஹிலாரி தோற்பதற்காகவும், டிரம்ப் வெற்றி பெறுவதற்காகவும் இதை செய்துள்ளனர்’ என தெரியவந்தது.இது தொடர்பாக விசாரணை நடத்த அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா உத்தரவிட்டார். அத்துடன், ரஷியா மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்தார். ரஷிய தூதரக அதிகாரிகளை நாட்டை விட்டு வெளியேற உத்தரவு பிறப்பித்து ஒபாமா நடவடிக்கை எடுத்துள்ளார்.டிரம்ப் வெற்றியை எதிர்த்து மறு வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. ரஷியா தலையீடு தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது. இத்தகைய சர்ச்சைகளால் டிரம்ப் வெற்றி கேள்விக் குறியாகி வரும் நிலை இருந்தது. இந்த நிலையில் அமெரிக்க சட்டப்படி அதிபரை அதிகார பூர்வமாக தேர்ந்தெடுக்கும் ‘எலெக்டோரல் காலேஜ்’ எனப்படும் தேர்வாளர்கள் தேர்தல் நடந்தது. அதில் டிரம்ப் அமோக வெற்றி பெற்றார்.அதை தொடர்ந்து பாராளுமன்றம் கூடியது. அதில் மக்களவை மற்றும் பிரதிநிதிகள் அடங்கிய கூட்டத்தில் தேர்தல் முடிவை துணை அதிபர் ஜோபிடன் வெளியிட்டார். அதில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றது உறுதி செய்யப்பட்டது.அதை தொடர்ந்து அமெரிக்காவின் 45-வது அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்கிறார். அதற்கான விழா வருகிற 20-ந் தேதி நடக்கிறது.அதில் டிரம்பை எதிர்த்து போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டன், அவரது கணவரும் முன்னாள் அதிபருமான பில் கிளிண்டன், மற்றும் முன்னாள் அதிபர் ஜார்ஜ்புஷ் அவரது மனைவி லாராஷ் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.