ஒரே கல்வியாண்டில் 2 பட்ட படிப்பு; மனு தள்ளுபடி!

ஒரே கல்வியாண்டில் இரண்டு பட்டப் படிப்புகள் முடித்ததால், முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணி கோரிய மனுவை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.



மதுரை என்.பி.நகர் முருகன். இவர் 2009 ல் இளநிலை பட்டப்படிப்பு முடித்தார். 2012-13ல் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய முதுகலை பட்டதாரி தமிழாசிரியர்கள் நியமனத்திற்கான தேர்வில் பங்கேற்றார். அவருக்கு 104 மதிப்பெண் வழங்கப்பட்டது. ஆனால் பணிக்கு தேர்வான தகுதியானவர்கள் பட்டியலில் முருகன் பெயர் இடம் பெறவில்லை.

முருகன்,தேர்வானவர்கள் பட்டியலில் எனது பெயரைச் சேர்க்க வேண்டும். முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணி வழங்க உத்தரவிட வேண்டும், என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.



நீதிபதி எஸ்.வைத்தியநாதன் உத்தரவு:

மனுதாரர் பி.எட்.,படிப்பை கல்லுாரியிலும், எம்.ஏ., (தமிழ்)படிப்பை தொலைநிலைக் கல்வி மூலம் ஒரே கல்வியாண்டில் முடித்துள்ளார். இதற்கு விதிகளில் இடமில்லை என்பதால், மனுதாரர் பெயரை ஆசிரியர் தேர்வு வாரியம் நிராகரித்துள்ளது. தகுதி அடிப்படையில் இம்மனு ஏற்புடையதல்ல. தள்ளுபடி செய்கிறேன் என்றார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...