நாடு முழுவதும்நீதிபதிகள் பற்றாக்குறையால் 40 லட்சம் வழக்குகள் தேக்கம்!!

நீதிபதிகள் பற்றாக்குறை காரணமாக பல்வேறு உயர் நீதிமன்றங்களில் 40.54 லட்சம் வழக்குகள் தேக்கமடைந்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவற்றில் 7 லட்சத்துக்கும் அதிகமான வழக்குகள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது.





உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகளை, "கொலீஜியம்' (நீதிபதிகள் குழு) வாயிலாக நியமிக்கும் நடைமுறையில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. "கொலீஜியம்' விவகாரத்தில் மத்திய அரசு அளித்த வரைவு அறிக்கையில் இடம்பெற்றுள்ள சில அம்சங்களுக்கு நீதிபதிகள் குழு எதிர்ப்புத் தெரிவித்து வருவதே அதற்குக் காரணம்.

இதன் விளைவாக காலியாக உள்ள இடங்களில் உடனடியாக புதிய நீதிபதிகளை நியமிக்க இயலாத நிலை எழுந்துள்ளது. இந்நிலையில் இந்திய நீதித்துறையின் ஆண்டறிக்கை வெளியிடப்பட்டது.

அதில் குறிப்பிடப்பட்டிருந்த முக்கிய அம்சங்கள்:

பற்றாக்குறை விகிதம் 40 சதவீதம்


நாட்டில் உள்ள 24 உயர் நீதிமன்றங்களில் மொத்தம் 1,079 நீதிபதிகள் இருக்க வேண்டும் என்று வரையறுக்கப்பட்டுள்ளது. ஆனால், கடந்த ஆண்டு ஜூன் மாத நிலவரப்படி மொத்தம் 608 நீதிபதிகளே பொறுப்பில் உள்ளனர். இந்தப் பற்றாக்குறை விகிதம், 40 சதவீதத்துக்கு மேல் உள்ளது. இதன் காரணமாக 40.54 லட்சம் வழக்குகள் தீர்வு காணப்படாமல் நிலுவையில் உள்ளன. என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...