கர்நாடகா பெண்ணுக்கு பிறந்த அதிசயக் குழந்தை!



கர்நாடகா மாநிலத்தில் பெண் ஒருவருக்கு நான்கு கால்கள், இரண்டு பிறப்புறுப்புகளுடன் குழந்தை பிறந்துள்ளது.

உலகில் நிறைய குழந்தைகள் வித்தியாசமாகப் பிறந்துள்ளன. உதாரணமாக மூன்று கைகள், 31 விரல்கள், ஒட்டிப் பிறப்பது போன்று வித்தியாசமாகப் பிறக்கின்றன.
அதுபோல, கடந்த 2015ஆம் ஆண்டு உத்தரப்பிரதேசத்தில் பெண் ஒருவருக்கு விநாயகர்போல் பெண் குழந்தை ஒன்று பிறந்தது.

கர்நாடக மாநிலம், ராய்ச்சூர் மாவட்டம், புலந்தின்னி கிராமத்தைச் சேர்ந்த சென்னபசவா (26), லலிதம்மா (23) தம்பதியினருக்கு கடந்த சனிக்கிழமை அதிகாலையில் ஆண் குழந்தையொன்று பிறந்தது. அந்தக் குழந்தைக்கு 4 கால்களும் 2 பிறப்புறுப்புகளும் இருந்ததைக் கண்டு மருத்துவர்கள் ஆச்சரியமடைந்தனர்.

இந்தக் குழந்தை கடவுள் எங்களுக்குக் கொடுத்த வரம். எனவே, குழந்தையை உயர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்க மாட்டேன் என்று, லலிதம்மா கூறியுள்ளார்.

இதையடுத்து, லலிதம்மாவுக்கு பிரசவம் பார்த்த மருத்துவர் விருபக்ஷா அறிவுரையின்பேரில், அந்தக் குழந்தை தற்போது பெல்லாரியில் உள்ள விஜயநகர மருத்துவ அறிவியல் கழகத்தின் (விஐஎம்எஸ்) பச்சிளங் குழந்தைகள் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளது. விஐஎம்எஸ் மருத்துவமனையில் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்து மற்ற உறுப்புகளை எடுக்க முயற்சி செய்துவருவதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து விஐஎம்எஸ்-ல் உள்ள மருத்துவர் திவாகர் கூறியதாவது: ‘குழந்தையின் உடல்நலத்தை மருத்துவர்கள் குழு கண்காணித்து வருகிறது. இது, தங்களுக்கு மிகவும் சவாலாக உள்ளது’ என்று அவர் கூறியுள்ளார்.

இந்தியாவில் இப்படி ஒரு குழந்தை பிறப்பது இதுதான் முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...