மத்திய அரசின் பட்ஜெட் தாக்கலை 5 மாநில தேர்தல்கள் முடிந்த பின், வைத்து கொள்ள முடியுமா என்று கேட்டு மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பி வரும் 10-ஆம் தேதிக்குள் பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.
ஆண்டு தோறும் பிப்ரவரி மாதத்தில் நாடாளுமன்ற முதல் கூட்டத் தொடர் நடைபெறும். முதல் நாளில் நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி உரையாற்றுவார். அதன் மீது விவாதம் நடந்த பின்பு, முதல்கட்டத் தொடர் ஒத்தி வைக்கப்படும். 2-வது கட்டமாக பட்ஜெட் தொடர் தொடங்கும். ரயில்வே பட்ஜெட், பொருளாதார அறிக்கை தாக்கல் ஆகியவற்றை தொடர்ந்து மத்திய அரசின் பட்ஜெட் பிப்ரவரி கடைசி நாளில் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். ஆனால், இந்த நடைமுறையை மாற்றி ரயில்வே பட்ஜெட்டை பொது பட்ஜெட்டுடன் இணைத்து தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டது. மேலும், மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1-ஆம் தேதியே தாக்கல் செய்யவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
நாடாளுமன்ற நடைமுறையை மத்திய அரசு மாற்றுவதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இந்த சூழ்நிலையில், உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா உட்பட 5 மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் இந்த 5 மாநிலங்களிலும் அமலுக்கு வந்து விட்டது. இந்த அடிப்படையில் மத்திய, மாநில அரசுகள் எந்த புதிய திட்டத்தையும் அறிவிக்கக் கூடாது. ஆனால், மத்திய பட்ஜெட் அடுத்த மாதம் 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்படுவதால், அதில் பாஜ சில கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து, தேர்தலில் ஆதாயம் தேட முயற்சிக்கும் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக, பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி மற்றும் இடது சாரிகள் இது தொடர்பாக டெல்லியில் தலைமை தேர்தல் கமிஷனர் நஜீம் ஜைதியை நேரில் சந்தித்து மனு கொடுத்தனர். இதுகுறித்து தலைமை தேர்தல் கமிஷனர் நஜீம் ஜைதி கூறுகையில், ‘‘மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் தேதியை 5 மாநில தேர்தல்கள் முடிந்த பின்பு, அதாவது மார்ச் 8-ஆம் தேதிக்கு பிறகு மாற்ற மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
இது பற்றி, மத்திய அரசுடன் ஆலோசித்து விரைவில் முடிவெடுக்கப்படும்’’ என்று கூறியிருந்தார். இந்நிலையில், மத்திய அரசின் கேபினட் செகரட்டரி பிரதீப்குமார் சின்காவுக்கு தேர்தல் ஆணையம் ஒரு கடிதம் அனுப்பியுள்ளது. அதில், ‘‘உ.பி. உள்ளிட்ட 5 மாநில தேர்தல்களில் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்து விட்டன. எனவே, மத்திய, மாநில அரசுகள் புதிய திட்டங்களை அறிவிக்கக் கூடாது. இந்த நிலையில், நாடாளுமன்ற பட்ஜெட் தொடர் அட்டவணையை மார்ச் 8ம் தேதிக்கு பிறகு தள்ளி வைப்பது குறித்து மத்திய அரசின் கருத்தை வரும் 10ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது. மத்திய அரசின் விளக்கத்தை பெற்று அதன் அடிப்படையில் தேர்தல் ஆணையம் இவ்விஷயத்தில் முடிவெடுக்க உள்ளது. எனவே, மத்திய பட்ஜெட் தாக்கல் செய்வது தள்ளிப் போகுமா என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது
வெங்கய்யா நாயுடு விளக்கம்
இந்நிலையில் மத்திய பட்ஜெட்டிற்கும், நடக்கவிருக்கும் சட்டமன்ற பொதுத் தேர்தல்களுக்கும் எந்தத் தொடர்புமில்லை என்று கூறியுள்ளார் மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு. இதுகுறித்து, அவர் கூறும் போது, “ மத்திய பட்ஜெட் முழுவதும் நாட்டு மக்களை பற்றியும், அவர்களது எதிர்காலத்தை பற்றியுமே இருக்கும். வரிவிதிப்பு பரிந்துரைகள் என்ன? வருவாய் இனங்கள் எவை? போன்றவைதான் அதில் இடம்பெற்றிருக்கும். பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் இந்த பட்ஜெட் ஒட்டுமொத்த நாட்டுக்கானது. குறிப்பிட்ட மாநிலங்களுக்காக மட்டும் இருக்காது. இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் அதிருப்தியை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. பட்ஜெட் வேண்டாம் என்றால் வளர்ச்சியோ, முன்னேற்றமோ வேண்டாம் என்றுதான் பொருள். இதைத்தான் நீங்கள் விரும்புகிறீர்களா? ஏழைகள், விவசாயிகளை ஆதரிக்க வேண்டாம் என்பது தான் உங்கள் விருப்பமா? ஏன் இதை எதிர்க்கிறீர்கள்? பட்ஜெட் என்பது பட்ஜெட் மட்டுமே.
தற்போதைய ரூபாய் நோட்டு வாபஸ் குறித்த தகவல்கள் அவர்களுக்கு எதிராகவே திரும்பியிருப்பதால், எதிர்க்கட்சிகள் அனைத்தும் அச்சமடைந்துள்ளன. இது தொடர்பாக திரும்பத் திரும்ப வெளியாகும் ஆய்வு முடிவுகளை அவர்கள் எண்ணிப்பார்த்து உறைந்து போய் இருக்கின்றனர். எனவே தங்களுடைய செயல்திட்டங்களை மீண்டும் மாற்றியிருக்கும் எதிர்க்கட்சிகள், தற்போது பட்ஜெட்டை தடுக்கும் முயற்சியில் இறங்கி உள்ளனர். மக்களுக்கு எதிரான நடவடிக்கையான இது மீண்டும் அவர்களுக்கு எதிராகவே திரும்பும்” என்று வெங்கய்யா நாயுடு கூறினார்.