பிளாஸ்டிக்: ஒரு லட்சம் அபராதம்!

பிளாஸ்டிக் பயன்பாடு மனிதருக்கும், சுற்றுச்சுழலுக்கும் கால்நடைகளுக்கும் பலவித பாதிப்புகளை உண்டாக்குகிறது. இதனால்,பல்வேறு சுற்றுலாத்தலங்களிலும் வழிப்பாட்டுத் தலங்களிலும் பிளாஸ்டிக் பைகளுக்குத் தடை விதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பொங்கல் பண்டிகையிலிருந்து ராஜபாளையத்தில் 40 மைக்ரான் அளவுக்கு கீழுள்ள பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யவோ, சேமித்து வைக்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. இத்தடையை மீறினால் ஒரு லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என ராஜபாளையம் நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தைப்பொங்கல் பண்டிகை வரவிருப்பதால், அப்பண்டிகைக்குத் தேவையான பொருட்களை மக்கள் பெரும்பாலும் பிளாஸ்டிக் பைகளில் வாங்கி செல்வார்கள். அதனால், இந்த தைப்பொங்கல் பண்டிகையொட்டி, ராஜபாளையம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 40 மைக்ரான் அளவுக்குக் கீழுள்ள பிளாஸ்டிக் பை, விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தினை ராஜபாளையம் நகராட்சி செயல்படுத்த ஆரம்பித்த பிறகு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

குறிப்பாக, சுற்றுசூழலைப் பாதுகாக்கும் வகையில், குப்பைகளை உடனடியாக அகற்றுதல், திறந்தவெளி கழிப்பறைகளை உபயோகிப்பதைத் தவிர்த்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், வருகிற தைப்பொங்கல் முதல் பிளாஸ்டிக் பைகள், டம்ளர்கள்,தட்டு போன்றவைகளை பயன்படுத்தவும்,விற்பனை செய்யவும், சேர்த்து வைக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த தடையை மீறி செயல்படுவோர் மீது ஒரு லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். அதே நிலை நீடித்தால் நகராட்சிக்குள் தொழில் செய்ய நிரந்தரமாக தடை விதிக்கப்படும் என நகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.

நாகர்கோவில் நகராட்சியிலும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டிற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுபோன்று, திருநெல்வேலியில் பிளாஸ்டிக் பையை ஒழிக்கும் நோக்கில் இறைச்சிக் கடை நடத்தி வரும் அப்துல் ரசாக்,வாடிக்கையாளர்களுக்கு ஒலைப் பெட்டியில் இறைச்சி வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...