பொதுத்துறை வங்கி அதிகாரிகளின் ஊதியங்களில் மாற்றம் கொண்டு வர இருப்பதாக வங்கி வாரியக் குழு தலைவர் வினோத் ராய் கூறியுள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், ‘அடுத்த நிதியாண்டு முதல் பொதுத்துறை வங்கிகளுக்கு புதிய
பணியாளர்களை கவரும் நோக்கத்தில் சம்பள விகிதங்களில் மாற்றம் செய்ய உள்ளோம். ஆனால் இது நிலையான சம்பள உயர்வாக இருக்காது. செயல்பாடுகளின் அடிப்படையை பொறுத்து மாற்றங்கள் இருக்கும். இதன் மூலம் சந்தையில் இருந்து திறமைவாய்ந்த பணியாளர்களை தேர்வு செய்ய முடியும்.
இந்த மாற்றம் நிர்வாக அதிகாரிகளுக்கு மட்டுமன்றி, நடுத்தர மற்றும் ஆரம்ப நிலை பணியாளர்களுக்கும் வழங்கப்படும். அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் நேர்மை, வெளிப்படைத்தன்மை இல்லாமல் இருப்பதால் வளர்ச்சி மற்றும் முதலீட்டாளர்களின் ஆர்வம் குறைந்து காணப்படுகிறது. இதன் காரணமாக அரசாங்கம் நலத்திட்ட உதவிகளுக்கு நிதி ஒதுக்க முடியாமல் இருக்கிறது.
தற்போது பொதுத்துறை வங்கிகளின் இயக்குநர்கள் மற்றும் தலைமைச் செயல் அதிகாரிகள் 15 முதல் 18 மாதங்கள் இருப்பதால் அவர்களால் சிறப்பாக செயல்பட முடியவில்லை. எனவே வெளிப்படைத்தன்மையை உருவாக்க அவர்களுக்கு ஆறு ஆண்டுகள் பதவி வழங்க திட்டமிட்டிருக்கிறோம்’ என்று கூறினார்.