பெட்ரோல் நிலையங்களில் டெபிட், கிரெடிட் கார்டுகள் ஏற்கப்படாது - தமிழ்நாடு பெட்ரோல் முகவர் சங்கம் அறிவிப்பு!!!

நள்ளிரவு முதல் பெட்ரோல் பங்குகளில் டெபிட்,கிரெடிட் கார்டுகள் ஏற்கப்படாது என்று தமிழ்நாடு பெட்ரோல் முகவர் சங்கம் அறிவித்துள்ளது.கருப்பு பணத்தை கட்டுப்படுத்தும்வகையில், பழைய ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று நவம்பர் மாதம் 8-ந் தேதி மத்திய அரசு அறிவித்தது.இதையடுத்து நாடு முழுவதும் உருவான பண தட்டுப்பாடு,3 மாதமாகியும் இன்னும்

சீரடையவில்லை.ரொக்கப்பணத்தை கையாள்வதற்கு பதிலாக, அனைவரும் டிஜிட்டல் பண பரிமாற்ற முறைக்கு மாறுமாறு பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டார். பண தட்டுப்பாடு காரணமாக, கணிசமானோர் கிரெடிட், டெபிட் கார்டுகளை பயன்படுத்த தொடங்கினர். மேலும் ரொக்கம் இல்லாத, டிஜிட்டல் பண பரிமாற்றத்தை மேலும் ஊக்குவிக்கும்வகையில், அத்தகைய பரிமாற்றத்துக்கு 11 சலுகைகளை மத்திய அரசு அறிவித்து ஊக்குவித்தது. கிரெடிட், டெபிட் கார்டுகள் மூலம் பெட்ரோல், டீசல் போட்டால், விலையில் 0.75 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்படும்.இந்நிலையில்  பெட்ரோல் நிலையங்களில் டெபிட், கிரெடிட் கார்டுகள் ஏற்கப்படாது என்று பெட்ரோல் பெட்ரோல் முகவர் சங்கம் திடீரென அறிவித்துள்ளது.இது தொடர்பாக தமிழ்நாடு பெட்ரோலிய முகவர்கள் சங்க பொதுச்செயலாளர் ஐதர் அலி கூறியிருப்பதாவது:# டெபிட்,கிரெடிட் கார்டுகள் இன்று நள்ளிரவு முதல் ஏற்றுக்கொள்ளப்படாது.# மிககுறைந்த லாபமே கிடைப்பதால் வங்கி அட்டைகளை ஏற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.# எண்ணெய் நிறுவனங்கள் ஏதேனும் உறுதி தந்தால் முடிவை பரிசீலிப்போம்.#வங்கிகள் வரியை வாடிக்கையாளர்களிடம் நாங்கள் எப்படி பெற முடியும்?.# எந்தவித முன்னறிவிப்பும் இன்றி வங்கிகள் திடீரென வரி விதித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.# கார்டுகளுக்குரிய பணத்தை வங்கிகளில் இருந்து பெற 4 நாட்களாகிறது.# பேச்சுவார்த்தை மூலம் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்.இவ்வாறு தமிழ்நாடு பெட்ரோலிய முகவர்கள் சங்க பொதுச்செயலாளர் ஐதர் அலி கூறியுள்ளார்.தமிழ்நாடு பெட்ரோலிய முகவர்கள் சங்க தலைவர் கே.பி.முரளி கூறுகையில்,# கார்டுகளை பயன்படுத்துவதால் வங்கிகளில் இருந்து பணம் கிடைப்பதில் தாமதம் என புகார் வந்துள்ளது.# வங்கிகளில் இருந்து பணம் தாமதமாக கிடைப்பதால் இழப்பு ஏற்படுகிறது.# ரொக்கமற்ற பணப்பரிவர்த்தனைக்கு 1% வரி விதிப்பு தொழிலை கடுமையாக பாதிக்கும்.# வரி விதிப்பு பற்றி எண்ணெய் நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.புதுச்சேரி பெட்ரோல் பங்க்குகளிலும் நள்ளிரவு முதல் கார்டுகள் ஏற்கப்படாது என்று கூறப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...