*பிரதமரின் அறிவிப்பு ஏமாற்றமளிக்கிறது : ஜல்லிக்கட்டு நடத்தும் வரை போராட்டம் ஓயாது என இளைஞர்கள் அறிவிப்பு
டெல்லி: தமிழர்களின் கலாச்சாரமான ஜல்லிக்கட்டை பாராட்டியுள்ள பிரதமர் மோடி, அதனை நடத்துவதற்கு தேவையான சட்ட ரீதியிலான நடவடிக்கைக்கு முயற்சி மேற்கொள்ளாததற்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறும் வரை தங்களின் போராட்டம் ஓயாது என
போராட்ட களத்தில் உள்ள இளைஞர்கள் உறுதிபட தெரிவித்துள்ளனர். முன்னதாக மோடியை சந்தித்த முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக அரசின் முயற்சிக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும், மேலும் இக்கலாச்சாரத்தை மத்திய அரசு பாராட்டுவதாகவும் ஆனால் அதே சமயம் ஜல்லிக்கட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் எந்த முடிவும் எடுக்க முடியாது என்றும் பிரதமர் மோடி திட்டவட்டமாக கூறினார். ஜல்லிக்கட்டு கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்தது என கூறியுள்ள மோடி, எனினும் இப்போட்டிகளை நடத்த வழிவகை செய்ய மத்திய அரசால் தற்போது உடனடியாக ஏதும் செய்ய இயலாது என கூறியுள்ளார்.
ஜல்லிக்கட்டு தடை குறித்து தமிழக முதல்வரிடம் கலந்தாலோசித்ததாகவும், எனினும் இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் மத்திய அரசால் இவ்விகாரத்தில் ஏதும் செய்ய முடியாது என மோடி கூறியுள்ளார். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ள போதும் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி உண்டா, இல்லையா என பிரதமர் மோடி தெளிவுபடுத்தவில்லை. ஜல்லிக்கட்டை பாராட்டிய மோடி அதற்காக அனுமதி வழங்க சட்ட நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை என்பது தமிழக மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஜல்லிக்கட்டு விவகாரம் தமிழகத்தையே உலுக்கி வரும் நிலையில் டெல்லியில் இன்று பிரதமர் மோடியை, மாநில முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார். ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க அவசரச் சட்டம் பிறப்பிக்க இச்சந்திப்பின் போது மோடியை வலியுறுத்தினார். மேலும் மிருகவதை தடை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவும் ஓ.பன்னீர்செல்வம் கோரினார். தமிழகத்தில் நடைபெறும் இளைஞர்களின் தன்னெழுச்சி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு தலையிட வேண்டும் எனவும் முதல்வர் பன்னீர்செல்வம் பிரதமரை வலியுறுத்தினார்.
ஆனால் தமிழகத்தின் அறவழி போராட்டத்திற்கு செவி சாய்க்காமல் மத்திய அரசு ஜல்லிக்கட்ட நடத்த தங்களால் ஏதும் செய்ய முடியாது என கைவிரித்துள்ளது மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.