அரசு மருத்துவமனை செவிலியர் இட மாறுதலுக்கு லஞ்சம்! கணக்கில் வராத மதுரை காலிப் பணியிடங்கள்!!!

மதுரை அரசு மருத்துவமனை போதிய அளவு செவிலியர்கள் இல்லாமல் திண்டாடும் நிலையில், இங்கு இட மாறுதல் பெற விரும்பும் செவிலியர்களிடம் பல லட்சம் ரூபாய் லஞ்சம் பெறப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

இம்மருத்துவமனையில் 411 செவிலியர்கள் பணியில் உள்ளனர். இவர்களில் 73 பேர் அயல்பணி பெற்றவர்கள்.செவிலியர் கவுன்சில் விதிமுறைகள் படி, இங்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகளின்
எண்ணிக்கையுடன் ஒப்பிட்டால் ஆயிரத்துக்கும் மேலான செவிலியர்கள் தேவை. ஆனால், குறைவான அளவிலேயே செவிலியர்கள் உள்ளதால் சிகிச்சையின் தரம் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது.



இந்நிலையில் மதுரை புறநகர் பகுதிகள், மற்ற மாவட்ட அரசு மருத்துவமனைகளில் வேலை செய்யும் செவிலியர்கள், மதுரை அரசு மருத்துவமனைக்கு பணியிட மாற்றம் பெற ஏழு லட்சம் வரையும், அயல் பணி பெற மூன்று லட்சமும் லஞ்சம் கொடுக்க வேண்டியிருப்பதாக புகார் எழுந்துள்ளது.



இதற்கு தகுந்தாற்போல், 'கவுன்சிலிங்' நடக்கும் போது மதுரை அரசு மருத்துவமனையில் உள்ள காலிப்பணியிடங்களை வேண்டுமென்றே கணக்கில் காட்டுவதில்லை. அப்படி கணக்கில் காட்டும் பட்சத்தில், முறைப்படி பணியிடங்களை நிரப்ப வேண்டியிருப்பதோடு, லஞ்ச பணமும் பெற முடியாது என்பதே அதற்கான காரணம்.



செவிலியர்கள் சிலர் கூறியதாவது: மதுரை அரசு மருத்துவமனையில் வேலை செய்யும் செவிலியர்களுக்கு, நகர்புற ஊக்கத்தொகை, வீட்டு வாடகை படி போன்ற சலுகைகளுடன் அதிக சம்பளம் கிடைக்கிறது. குறிப்பிட்ட 'கிரேடுக்கு' மேல் உள்ளவர்களுக்கு பணிப்பளு மிகவும் குறைவு.

இது போன்ற காரணங்களால் இங்கு பணியிட மாறுதல் பெற பெரும்பாலோனோர் விரும்புகின்றனர். ஆனால், அதற்கு பல லட்சம் லஞ்சம் பெறுகின்றனர். இந்த பணம் கட்சிக்காரர்கள், செவிலியர் சங்க நிர்வாகிகள் மூலம் மேலிடத்திற்கு செல்கிறது. இது குறித்து அரசு விசாரணை நடத்த வேண்டும்,என்றார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...