வங்கக் கடலில் இரண்டு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் முதல் டிசம்பர் வரை பெய்யக்கூடிய வடகிழக்குப் பருவமழை பொய்த்துப் போனது. நாடா மற்றும் வர்தா புயலால் சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம்
மாவட்டங்களில் பெரும் சேதம் ஏற்பட்டதே தவிர போதிய மழை பெய்யவில்லை. இதனால் பயிர் கருகுவது மட்டுமின்றி, குடிநீர்ப் பஞ்சமும் ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகம் வறட்சி மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள தட்பவெப்பநிலை மாற்றத்தால், காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி, சில இடங்களில் அடிக்கடி மழை பெய்து வருகிறது. வட மாவட்டங்களைத் தவிர, மற்ற மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. இதில் பாபநாசத்தில், அதிகபட்சமாக 11 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையும், மாலத்தீவு அருகே ஒரு குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையும் உருவாகியுள்ளன. இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகளிலும், மற்ற ஒரு சில இடங்களிலும் அடுத்த 24 மணி நேரத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ளார்.
சென்னையைப் பொருத்தவரை, வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்துள்ளார். இதனால் பழைய பெய்யுமா? பெய்யாதா? என்ற எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளனர்.