முதல்வர் விழா திடீர் ரத்து : அதிகாரிகள் குழப்பம் !!

முதல்வர் பன்னீர்செல்வம் பங்கேற்கும் விழா, நேற்று திடீரென ரத்து செய்யப்பட்டதால், அதிகாரிகள் குழப்பம் அடைந்துள்ளனர். தமிழகத்தில், அரசின் பல துறைகள் சார்பில், கட்டடங்கள் கட்டும் பணி முடிந்தும், பல மாதங்களாக திறக்கப்படாமல் உள்ளது. இவற்றை, முதல்வர் பன்னீர்செல்வம், 'வீடியோ

கான்பரன்ஸ்' முறையில், நேற்று திறந்து வைப்பார் என, அறிவிக்கப்பட்டிருந்தது. வழக்கமாக தலைமை செயலகத்தில் உள்ள, 'வீடியோ கான்பரன்ஸ்' அறையில் தான், இதுபோன்ற விழாக்கள் நடக்கும். ஆனால், இம்முறை இந்த விழா ஏற்பாடு, சென்னை, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் நடந்தது. இதற்காக, நேற்று முன்தினம், 25 துறைகளின் அதிகாரிகளும், தலைமை செயலகத்தில் இருந்து, எழும்பூர் சென்று, விழா ஒத்திகையில் பங்கேற்றனர். ஆனால், நேற்று காலை விழா நடக்கவில்லை. நேற்று முன்தினம் நள்ளிரவு, 12:30 மணிக்கு, விழா ரத்து செய்யப்பட்டதாக, அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விழா, திடீரென ரத்தானது ஏன் என, தெரியாமல் அதிகாரிகளும் குழப்பம் அடைந்தனர்.
சசிகலாவிற்கும், முதல்வர் பன்னீர்செல்வத்துக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதலால், விழா ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. கட்டடங்களை, சம்பந்தப்பட்ட துறைகளின் அமைச்சர்களே திறக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...