போராட்டகள இளைஞர்களுக்கு ஓர் ஆசிரியனின் சமர்பனம் !!

ஏனென்று தெரியவில்லை,
மனதிற்கு தலைகால் புரியவில்லை!!

வாழ்த்தலாம் என்று வந்துவிட்டேன்...
வார்த்தைகள் மட்டும்
சிக்கவில்லை!!
இருந்தாலும் முயற்சிக்கிறேன்🙂

முகநூலில் புதைந்து
மூழ்கித்தான் போவானோ..
என நினைத்தேன் இளைஞர்களை...😒


அந்நூலில் தான் அவர்கள்
அணியணியாய் திரன்டனர்,
வீரம்,தன்மானம் எனும்
தமிழ்முகவரியை மீட்டனர்.

யார்சொல்லி வந்தீர்கள்?
யாதுமாகி நின்றீரே💪🏻

விவேகானந்தனின் விதைகளோ🤔
"சனவரி 12ல் ஆரம்பித்தீர்🙏

பாரதியின் வரிகளோ🤔
" தீயாய் பற்றிக்கொண்டீர்🙏

வள்ளுவனின் திருக்குறளோ!
அன்பினால் அதிகாரம் செய்கிறீர்🙏

 புதுக்கவிதையோ🤔
" வாடிவாசல் திறக்கும்வரை
வீடுவாசல் செல்லமாட்டோமென"
தினறடிக்கிறீற்களே💪🏻

ஒருவேளை ஐய்க்கூ வா🤔
எங்கிருந்து புறப்பட்டீரென
காவல்துறையே கலங்கியதாமே💪🏻

தறிகெட்டுபோவானோ என்றிருந்த உம் பெற்றோரெல்லாம்,
தவமிருந்து பெற்றோமோ! என தன்னிறைந்து போயுள்ளனர்🙏

தமிழக தாய்களுக்கெல்லாம்
செல்லபிள்ளையாய் மாறிநீர்.

வாழ்த்தாத வாயுண்டா உங்களை,👏🏻
மகிழ்சியில் மலராத
மனமுண்டா👏🏻

சிறுபிள்ளையாய் ஆரம்பித்தீரோ🤔,இல்லை
சிந்தை தெளிந்து ஆரம்பித்தீரோ🤔
தெரியவில்லை. ஆனால்...
நீங்கள் செய்வது ஓர்...
"சுதந்திர போராட்டம்!!
இனம் மீட்கும் புரட்சி💪🏻.

வெல்லட்டும் உம் போராட்டம்!
மீளட்டும் நம் இனம்🙏

உடல் இனையாவிட்டாலும்,
என் இதயம் இனைந்திருக்க...
   
முதன்முறையாக
    பெருமையுடனும்,
        கர்வத்துடனும்,
         
சொல்கிறேன்......

" நான் இந்த தலைமுறை இளைஞனின் ஆசிரியன்💪🏻"

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...