தமிழகத்தில் விறுவிறு... சுப்ரீம் கோர்ட் சுறுசுறு... தொட்டுவிடும் தூரத்தில் வருகிறது தீர்ப்பு தேதி!!!

தமிழகத்தில் அரசியல் நிகழ்வுகள் வேகமாக மாறியபடி உள்ள நிலையில், தலைமை நீதிபதி மாற்றம், நீதிபதி விரைவில் ஓய்வு என, டில்லி யில் சுப்ரீம் கோர்ட்டும் சுறுசுறுப்பாவதால், சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு நெருங்கு கிறது என்ற பேச்சு அடிபடுகிறது.



பெங்களூர் சிறப்பு கோர்ட்டில், 18 ஆண்டுகளாக நடந்த சொத்துக் குவிப்பு வழக்கில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா மற்றும் இளவரசி, சுதாகரன் ஆகிய நான்கு பேருக்கும் தண்டனை வழங்கப்பட்டது.

நீதிபதி குன்கா அளித்த தீர்ப்பால், முதல்வர் பதவியை இழந்து சிறைக்கு சென்றார் ஜெய லலிதா. ஆனால், நான்கு பேரும் அளித்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த கர்நாடகா ஐகோர்ட் தனி நீதிபதி குமாரசாமி, நான்கு பேரையும் விடுதலை செய்தார்.

அந்த தீர்ப்பு, அரசியல் அரங்கில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. ஜெயலலிதா உள் ளிட்ட நான்கு பேரின் விடுதலையை எதிர்த்து, கர்நாடக அரசும், தி.மு.க., பொதுச் செயலர் அன்பழகனும், மேல்முறையீடு செய்தனர். இவ்வழக்கை விசாரித்த, நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ் மற்றும் அமித்வா ராய் ஆகியோர், தீர்ப்பை ஒத்திவைத்து உள்ளனர். தீர்ப்பு வெளி யிடப்படுவது குறித்த காலக்கெடு எதுவும் அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில், ஜெயலலிதா திடீரென உடல் நலம் குன்றி மருத்துவமனையில்
சேர்க்கப்பட்ட போது, சொத்துக் குவிப்பு வழக்கில் எதிர்மறையான தகவல் டில்லியிலிருந்து வந்த அதிர்ச்சி யால் அவர் மயக்கமடைந்ததாக வதந்தி கிளம்பியது.

பின், ஜெயலலிதாவின் மருத்துவமனை காட்சிகள் நாள்தோறும் அரங்கேறி, தமிழக அரசியல் அரங்கை வேறு திசை திருப்பவே, சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு குறித்த எதிர்பார்ப்பே மங்கியது. நெருக்கடி யான அரசியல் சூழ்நிலையில், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வெளியிடுமா என்ற சந்தேகங்களும் கிளம்பின.

யாரும் எதிர்பாராத வகையில் ஜெயலலிதா மரணமடைய, சூழ்நிலை இன்னும் குழப்பமானது. பா.ஜ., - எம்.பி.,யும், இவ்வழக்கின் காரண கர்த்தா வுமான சுப்பிரமணியன் சாமி, 'ஜனவரியில் தீர்ப்பு வரப் போகிறது' எனக் கூறி, பரபரப்பை அதிகப்படுத் தினார். இவையாவும் சசிகலா, அ.தி.மு.க., பொதுச் செயலராவதற்கு முன் நடந்தவை.

வழக்கு முடிந்ததும், மூன்று அல்லது நான்கு மாதங்களில் தீர்ப்பை எதிர்பார்க்கலாம் என, பலரும் நம்பினர். தற்போது, ஆறு மாதங்களுக்கு மேலாகி விட்டது. தலைமை நீதிபதியாக இருந்த, டி.எஸ். தாக்குர் ஓய்வு பெற்று, ஜே.எஸ்.கெஹர் பதவி யேற்றுள்ளார்.

இதையொட்டிய அலுவல்கள் முடிந்துள்ளதால், சுப்ரீம் கோர்ட்டின் பார்வை, சொத்துக் குவிப்பு வழக்கு மீது படலாம் என தெரிகிறது. இதுகுறித்த செய்தி, சுப்ரீம் கோர்ட் வட்டாரங்களில் சில நாட்களாக தீவிரமடைந்து வருகிறது.

ஜெயலலிதாவின் மறைவு, தீர்ப்பில் தாக்கத்தை ஏற்படுத்துமா, அரசியல்செல்வாக்கு மிக்க தலைவர் இப்போது இல்லாத நிலையில், மீதமுள்ளவர்கள் மீதான கோர்ட் டின் பார்வை எப்படி இருக்கும் என்பன போன்ற கேள்விகள், அரசியல் அரங்கில் வட்டமடிக்க வும் தவறவில்லை.

இந்நிலையில், இரு நீதிபதிகளில் ஒருவரான, பினாகி சந்திரகோஷ், மே 27ல் ஓய்வு பெற வுள்ளார். ஆனால், சனிக்கிழமையான மே 6 முதல், சுப்ரீம் கோர்ட்டுக்கு கோடை விடுமுறை துவங்கவுள்ளதால், அவரது கடைசி அலுவல், மே 5ல் நிறைவுபெறும். வழக்கை விசாரித்த நீதிபதி என்பதால் பினாகி சந்திரகோஷ் பணி ஓய்வு பெறுவதற்கு முன், எப்போது வேண்டு மானாலும் தீர்ப்பும் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

இந்த விஷயங்களை மையமாக வைத்து, சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்புக்கான தேதி, வெகு துாரத்தில் இல்லையென, தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


மூன்று விஷயங்கள்


* கர்நாடக அரசின் வாதங்கள் ஏற்கப்பட்டால், குன்காவின் தீர்ப்பு உறுதி செய்யப்படலாம் அல்லது புதிய தண்டனை விபரங்கள் அறிவிக் கப்படலாம்; அது சசிகலாவின் அரசியல் வாழ்க்கையை பாதிக்கும்

* நான்கு பேரது வாதங்கள் ஏற்கப்பட்டால், குன்காவின் தீர்ப்பு ரத்தாகி விடுதலையாவர்; இதை எதிர்த்து, கர்நாடக அரசு மறுசீராய்வு வழக்கை தொடுக்கலாம்

* மீண்டும் கர்நாடகா ஐகோர்ட்டுக்கே வழக்கு திருப்ப அனுப்பப்படலாம்; கணக்கு பிழைகளை சரி செய்ய உத்தரவிடலாம். ஆனால், 'இதற்கு வாய்ப்பே இல்லை' என, நீதிபதி அமித்தவ் ராய் விசாரணையின் போது கூறியதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...