வேலைவாய்ப்பு: தமிழ்நாடு காவல் துறையில் பணியிடங்கள்!!

தமிழ்நாடு காவல் துறையில் காலியாகவுள்ள இரண்டாம் நிலை சிறைக் காவலர், காவலர், தீயணைப்புப் படை வீரர் ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்

வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள்: 15,711

காவல்துறை பணியிடங்கள் விபரம்:

1. இரண்டாம் நிலை சிறப்புக் காவல் படையில் ஆண்களுக்கு 4569 இடங்களும், பெண்களுக்கு 46 இடங்களும் உள்ளன.

2. இரண்டாம் நிலை காவலர் (ஆயுதப்படை) ஆண்களுக்கு 4627 இடங்களும், பெண்களுக்கு 3941 இடங்களும் உள்ளன

சிறைத் துறை பணியிடங்கள் விபரம்:

இரண்டாம் நிலை சிறைக் காவலர் ஆண்களுக்கு 976 இடங்களும், பெண்களுக்கு 39+1 (40) இடங்களும் உள்ளன.

தீயணைப்புப் படையில் 1512 இடங்கள் உள்ளன.

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200/-

கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 - 24க்குள் இருக்க வேண்டும்.

கடைசித் தேதி: 22.02.2017

மேலும் முழுமையான விவரங்களை அறிய www.tnusrb.tn.gov.in அல்லது https://drive.google.com/file/d/0B90tS9E-7te2UXQwN3B2V1NOa0U/view என்ற இணையதள முகவரியை பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...