தமிழகம் முழுவதும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக வறட்சியை ஆய்வு செய்த மத்திய குழு அதிகாரி கூறினார்
தமிழகத்தில் போதிய மழை இல்லாததால், கடுமையாக வறட்சி பாதிக்கப்பட்டது. இதனையடுத்த வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்கப்பட்டு போதிய நிவாரண நிதி வழங்க
வேண்டும் என மத்திய அரசிடம் முதல்வர் பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்தார். இதனையடுத்து தமிழகம் வந்த மத்திய குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
மாற்றுக்கருத்தில்லை:
தூத்துக்குடியில் வறட்சி பாதித்த பகுதிகளை மத்திய குழுவில் இடம்பெற்ற எஸ்.பி., சவுத்ரி, அழகேசன் குழுவினர், வீரபாண்டியபுரம், குண்டலகேசி, சூரன்குடி, அரியநாயகபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கருகிய மக்காச்சோளம், மிளகாய், உளுந்து, கால்நடைகளுக்கு உணவாக பயன்படும் சோளப்பயிர்கள் குறித்து ஆய்வு நடத்தினர்.
ஆய்வுக்கு பின் மத்திய குழுவில் உள்ள அழகேசன் கூறியதாவது: வறட்சி என்பதில் மாற்றுக்கருத்தில்லை. தமிழகம் முழுவதும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. பயிர்கள் கருகியுள்ளது பற்றி மத்திய குழு அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
தமிழகம் வந்துள்ள மத்திய குழுவினர் சிறுசிறு குழுக்களாக பிரிந்து தமிழகம் முழுவதும் ஆய்வு செய்து வருகிறோம். ஆய்வுக்கு பிறகு அனைத்து குழுவினரும் அறிக்கையை ஆய்வு செய்து ஒரே அறிக்கையாக மத்திய அரசிடம் அறிக்கை அளிக்கப்படும். நேற்று விருதுநகர், நெல்லையில் ஆய்வு செய்தோம். இன்று, தூத்துக்குடியில் ஆய்வு செய்தபின்னர் சிவகங்கை செல்ல உள்ளோம் எனக்கூறினார்.
கோரிக்கை:
தஞ்சாவூர் மாவட்டத்தில் வறட்சி பாதித்த பகுதிகளில் மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர். வாசுதா மிஸ்ரா, தீனா நாத், குமார் தலைமையிலான மத்திய குழுவினர் தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அருகேயுள்ள கோவில்பட்டு, காலை 9 மணியளவில் ஆய்வு செய்தனர். அப்போது அவர்களிடம் பயிர்கள் கருகியது தொடர்பாக விவசாயிகள் விளக்கமளித்தனர். தொடர்ந்து புதுப்பட்டினம், ஓரத்தநாடு, மேல்வாளூர், சொர்னாவூர் பகுதிகளிலும் மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்.
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகை முழுமையாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வறட்சி பாதித்த விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும். தற்கொலை செய்த விவசாயிகள் குறித்து முறையாக கணக்கெடுத்து அவர்களின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என மத்திய குழுவினரிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
ரூ.25 ஆயிரம் வேணும்:
தொடர்ந்து மத்திய குழுவினர் திருவாரூரில் ஆய்வு செய்தனர். திருவாரூர் மாவட்டம் பெருகவாழ்ந்தான், வடகாடு கோவிலூர் பகுதிகளிலும் மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர். வறட்சியால் 2,015 ஏக்கர் நிலம் பாதிக்கப்பட்டுள்ளதால், தங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். உப்பூர் கிராமத்தில் விவசாயிகளிடம் குறைகளை மத்திய குழுவினர் குறைகளை கேட்டறிந்தனர். தங்களுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர், லால்குடி, மணப்பாறை பகுதியில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்.
நாமக்கல் மாவட்டம் ராசாமபாளையம், சிங்களாந்தபுரம் பகுதிகளிலும் மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர். வறட்சி பாதித்த பகுதிகளை மத்திய குழுவில் இடம்பெற்ற ராஜ்மோகன், சந்தோஷ் உள்ளிட்ட அதிகாரிகள் மத்திய குழுவினரை ஆய்வு செய்தனர்.