வஞ்சிக்கப்பட்ட தமிழனின் எழுச்சி !!

தற்போது நடைபெறும் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு குடும்பம் குடும்பமாக அனைவரும் ஒற்றுமையாக அரசியல்வாதிகளை தவிர்த்து போராடுவது ஜல்லிக்கட்டுக்காக மட்டும்தானா ?

இல்லை ...

விவசாயிகளின் மரணம் ஏற்படுத்திய கோபம் ...

அரசியல்வாதிகளின் சந்தர்ப்பவாதம் ஏற்படுத்திய கோபம் ...


மோடியின் பண மதிப்பு விவகார கோபம் ...

ATM ல் நிற்க வைத்த கோபம் ...

தமிழக தொழில்களை அழிக்கும் பன்னாட்டு வியாபார கொள்கையின் மீது ஏற்ப்பட்ட கோபம் ...

முன்னாள் முதல்வர் மரணத்தில் இவர்கள் ஆடிய நாடகத்தின் மீது உள்ள கோபம் ...

அப்பல்லோ மருத்துவமனை மர்மம் விலகாத கோபம் ...

வாய்மூடி கிடக்கும் எதிர்கட்சிகளின் மீது உள்ள கோபம் ...

பன்னாட்டு கம்பெனிகளின் வியாபார ஊடுருவல் மீது உள்ள கோபம் ...

பணம் மட்டுமே பிரதானம் என்று அரசியல் செய்யும் அரசியல்வாதிகளின் மீது உள்ள கோபம் ...

காவிரி தண்ணீர் விவகாரத்தில் நாடகம் ஆடும் மத்திய அரசு மீது உள்ள கோபம் ...

கர்நாடகாவில் தமிழன் தாக்கப்பட்டதால் ஏற்ப்பட்ட கோபம் ...

முல்லை பெரியாரிலும் வஞ்சிக்கப்படும் ஏமாற்றத்தால் ஏற்ப்பட்ட கோபம் ...

மணல் கொள்ளையின் மீது உள்ள கோபம் ...

மலிந்து கிடக்கும் டாஸ்மாக் மீது உள்ள கோபம் ...

மத்திய அரசின் தமிழ் விரோதப்போக்கின் மீது உள்ள கோபம் ...

தான் வாக்களித்த தலைமை இல்லாமல் யாரோ தலைமை தாங்குகிறார்களே என்ற கோபம் ...

மத்திய அரசிடம் கை கட்டி நிற்கும் மாநில அரசு மீது உள்ள கோபம் ...

நம்மை காக்க எந்த கட்சியும் இல்லை என்ற கோபம் ...

இவை அனைத்தின் வெளிப்பாடே இன்று நடக்கும் ஜல்லிக்கட்டு போராட்டம்.

அதனாலேயே அவசர சட்டம் கொண்டு வரப்படும் என்று சொல்வதை நம்ப முடியாமல், அதிலும் ஏதேனும் சட்ட விளையாட்டு இருக்குமோ என்ற சந்தேகத்தில் போராட்டம் தொடர்கிறது.

ஒரு மிகப் பெரிய அரசியல் மாற்றம் வேண்டும் என்ற ஆதங்கம் ஒவ்வொரு தமிழனின் மனதிலும் உள்ளது ...

கட்டாயம் ஒரு விடிவு பிறக்கும் ...

வாழ்க தமிழ் ... வெழ்க தமிழகம் ...

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...