பொருளாதார வளர்ச்சி குறையும்! - ஆய்வு!!!

நடப்பு நிதியாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி ஏற்கனவே கணித்திருந்த விகிதத்தைவிட ஒரு சதவிகிதம் சரிவடையும் என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நடப்பு 2016-17 நிதியாண்டில் 7.6 சதவிகிதமாக இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் தனது
ஆய்வறிக்கையில் ஏற்கனவே தெரிவித்திருந்தது. அதன் பின்னர் நவம்பர் மாதம் 8ஆம் தேதி வெளியான நோட்டுகள் மீதான தடை அறிவிப்பு உற்பத்தித் துறையைக் கடுமையாகப் பாதித்துள்ளது. இதனால் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி சரிவடையும் என்று பல்வேறு ஆய்வு நிறுவனங்கள் கணித்துள்ளன.

இந்நிலையில், சர்வதேச நாணய நிதியம் 'வேர்ல்டு எகனாமிக் அவுட்லுக்' என்ற தலைப்பில் ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவின் வளர்ச்சி விகிதம் ஏற்கனவே கணித்திருந்த 7.6 சதவிகிதத்திலிருந்து குறைந்தது ஒரு சதவிகிதம் வரையில் குறையும். அதேபோல அடுத்த 2017-18 நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி கணிப்பைவிட 0.4 சதவிகிதம் சரிவடையும். பணமதிப்பழிப்பின் தாக்கம் அடுத்த நிதியாண்டின் துவக்கத்தில் காணப்படும். இவ்வாறு அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...