தமிழரின் கலாச்சாரத்தை அழிக்க நீ ( பீட்டா) யார் ???

*தமிழகம் முழுவதிலும் பல இடங்களில் ஜல்லிக்கட்டு தடைக்கெதிராக தடையை மீறி தமிழரின் வீர விளையாட்டுப்போட்டி நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் அலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்ற மற்றும் பார்வையாளர்கள் மீது தடியடி நடத்தியதுடன் போராடிய  இளைஞர்களை கைது செய்ததை  ஆசிரியர்கள் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.

*பாரம்பரிய கலாச்சாரத்தை காப்பாற்றும் இளைஞர்கள்!!!*

வீணாக மொபைலை பயன்படுத்தும் வெட்டிக்கூட்டமல்ல நாங்கள் ; எங்கள் மூப்பாட்டன்கள் காத்துவந்த
பாரம்பரியத்தையும் ,கலச்சாரத்தையும் அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் மாபெரும் போராட்டத்தில் யார்துணையுமில்லாமல் களம் கண்டுள்ள இளம் தலைமுறையினருக்கு ஆசிரியர்கள் சார்பில் எங்களின்  வீரமிக்க வணக்கங்கள். தமிழர்களின் வீரம் புதைக்கப்படவில்லை ,விதைக்கப்பட்டுள்ளதை மத்திய அரசுக்கு எடுத்துரைத்துள்ள இப்போராட்டதிற்கு                ஆசிரியர்களின் ழுழு ஆதரவு உண்டு.
                                                              *இளைஞர்கள் மத்தியில் ஏற்ப்பட்டிருக்கும் இந்த கொந்தளிக்கும் உணர்வு   அனைத்தையும் கற்றறிந்த ஆசிரியர்களுக்கு இருக்க வேண்டாமா ??                                                               *உலகிற்கே கலாச்சாரத்தை கற்றுக்கொடுத்த ".                         தமிழனின் கலாச்சாரம் குறித்து அடுத்த தலைமுறை அறியாமல் அழிக்கப்பட போகிறது...                                                                                                                                           * "இதை காக்க   வேண்டியது "தமிழர்களாகிய நம் ஒவ்வொருவரின் கடமையல்லவா "        *பொதுமக்களும்,ஆசிரியர்கள்,அரசு ஊழியர்கள்,வழக்கறிஞர்கள்,வியாபாரிகள்,கூலித்தொழிளார்கள் ,மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் ஒருசேர நம் ஒற்றுமையை அந்நியனுக்கு.                             ( பீட்டாவிற்கு )வெளிப்படுத்த வேண்டிய தருணமிது...                                         " தமிழன் என்று சொல்லடா ".                        " தலைநிமிர்ந்து நில்லடா "                                                                                              *இன்று பீட்டா என்ற வெளிநாட்டு கைகூலிகளின் தரமற்ற செயலால் நம் வீரம் கட்டப்பட்டுள்ளது....                      *வாயில்லா ஜீவன்கள் என்று வக்காலத்து வாங்கும் நீ ... வெளிநாடுகளில் கேட்பாரற்று  இருக்கும் செல்லப்பிராணிகளை கொன்று குவிக்கிறாயே அதுவும் கருணை தானா ??                                                                                                                                                        *எம் நாட்டிற்குள் சட்டம் போட்டு வேலி அமைக்க ( பீட்டா) நீ யார் ???                                                                                                        *எம் தலைமுறைக்கு எதை கற்றுத்தர வேண்டுமென்பதை முடிவு செய்ய வேண்டியது நாங்கள்...                                     * எங்கள் நாட்டு பசுமாடுகளை அழித்து ஜெர்சி பசுகளை வளர்த்து ,எங்கள் குழந்தைகளை நோயாளிகளாக மாற்றும் உம் சூழ்ச்சிகளை இனியும் வேர்அறுக்காமல் விடமாட்டோம்...                                                                                            *எம் தேசத்தை விட்டு உடனடியாக ஓடிவிடு !!                                     *இல்லையேல் உன்னை ஓட்டாமல் விடமாட்டோம் !!                                                  * உன் நயவஞ்சகத்தை அறியாமலிருக்க நாங்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல .

*தமிழரின் வீரமரபினை நிலை நிறுத்திட ,போராடும் இளைஞர்களுக்கு துணைநின்றிடுவோம்...                                                                                                                                                                                                                 " போராட்டம் நீடித்தால்"                                  " நாங்களும் களமிறங்கிடுவோம் "      
"எம்இனம் அழிவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க நாங்கள் கோழைகள் அல்ல ".                            *மத்திய அரசு இளைஞர்களின் கோரிக்கையை ஏற்று அவசரசட்டம் மூலம் ஜல்லிக்கட்டை நடத்திட வேண்டும் ,இல்லையேல்  தமிழர்கள் வீர வேங்கைகள் "என்பதை நிரூபிப்போம்...    அரசு விரைவாக  நல்லதொரு முடிவினை அறிவித்து.                    தமிழரின் வீரத்தை உலகிற்கு எடுத்துக்காட்டி வேண்டும்...      ''உணர்வுள்ள  தமிழனே இச்செய்தியினை பகிர்ந்திடு ,வென்றிடு  வெற்றியை  விரைவில் '' .                          ஜா.இராபர்ட் - மாநில பொதுச்செயலாளர்,             இ.ஆசிரியர்கள் அமைப்பு...( SSTA) 

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...