அன்பிற்கினிய அரசு ஊழியர்களே! ஆசிரியர்களே! அனைத்து சங்க நிர்வாகிகளே! ஒரு நிமிடம்: !!

ஒவ்வொரு முறை தமிழக  மக்களின் நியாயமான கோரிக்கைகளான காவிரி நீர்,மீத்தேன் உள்ளிட்ட விவசாயிகளின் பிரச்சனைகளின் போதெல்லாம் ஒதுங்கியே நிற்கிறீர்கள். அதிகபட்சமாக அறிக்கை ஒன்றினை உங்களிடமிருந்து எதிர்பார்க்கலாம்.



இதோ! தமிழர்களின் உணர்வோடு,பண்பாட்டோடு,கலாச்சாரத்தோடு கலந்திருக்கக்கூடிய 'ஜல்லிக்கட்டு' பிரச்சனையில் ஆண்கள்,பெண்கள்,இளைஞர்கள்,குழந்தைகள்,மாற்றுத் திறனாளிகளென அனைவரும் சாதி,மத பேதங்களேதுமின்றி தமிழகமெங்கும் ஏன்... உலகெங்கும் ஆங்காங்கே கொதித்தெழுந்து இரவு,பகல்,பனி,வெயில் பாராது, உண்ண உணவு,குடிநீர் ஏதுமின்றி குடும்பம் குடும்பமாக வீட்டை விட்டு வெளியில் வந்து போராடுகின்றனர்.

எல்லாவற்றுக்கும் மேலாக தமிழக முதல்வர் சற்று முன் அறிக்கை வாயிலாக உங்களுடன் தமிழக அரசும் சேர்ந்து போராடத் தயாராக இருக்கிறது என்று கூறியுள்ளார்.

நாம் நமது மக்களின் நலனுக்காக உழைக்கிறோம்.அதற்காக அவர்களது வரிப்பணத்திலிருந்து ஊதியம் பெறுகிறோம் என்பது உண்மையானால் நமது மக்களின் நலனுக்காக,நமது பண்பாடு மற்றும் கலாச்சாரத்தைக் காப்பதற்காக கொஞ்சம் நேரம் ஒதுக்கினால் தவறில்லை எனத் தோன்றுகிறது.

நீங்கள் சார்ந்திருக்கக் கூடிய சங்கங்களின் தலைமையுடன் தொடர்பு கொண்டு அற வழியில் பார்க்கும் பணிக்கு பாதிப்பு ஏற்படா வண்ணம் எவ்வாறு நமது ஆதரவை நம் மக்களுக்கு வழங்கலாம் எனக் கேட்டு கைகோருங்கள்.

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் நாளை தனது ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்துள்ளதாக தகவல்.

-அரசு ஊழியர்கள் ஊதிய உயர்வுக்காகவும்,தங்களது சலுகைகளுக்காகவும் மட்டும் போராடுபவர்களல்ல. நம் தமிழ் மக்களின் நலனைக் காப்பதில் அக்கறை உள்ளவர்கள் என்பதை வரலாற்றில் பதிய வேண்டிய நேரமிது.

-மிக முக்கியமான ஒன்று.... பணிக்கு, பணி நேரத்திற்கு இடையூறோ குந்தகமோ ஏற்படாதவாறு... அறவழியில் மட்டும்!

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...