மத்திய அரசுக்குச் சொந்தமான கதர் கிராம தொழில் வாரியம் மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டின் போதும் காலண்டர்கள், டைரிகள் அச்சிட்டு வெளியிடுகிறார்கள்.
அப்படி அச்சிடுகிற காலண்டர்களில் காந்தியடிகள் ராட்டையில் நூல் நூற்பது போன்ற படங்களே இடம் பெற்றிருக்கும். மரபார்ந்த இந்த பழக்கத்தை இதுவரை ஆட்சி செய்த எந்த அரசுகளும் மாற்றியதில்லை எனும் நிலையில், 2017-ஆம் ஆண்டிற்காக வெளியிடப்பட்டிருக்கும் காதி காலண்டரில் காந்தி படத்திற்கு பதில் பிரதமர் மோடி ராட்டையில் நூல் நூற்பது போன்ற படம் இடம் பெற்றிருக்கிறது.
இது காதி ஊழியர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அந்நிறுவனத்தின் மும்பை ஊழியர்கள் அமைதியான முறையில் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கடந்த ஒரு வாரமாக அவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். நேற்று அவர்கள் மும்பை காந்தி சிலை முன்பு திரண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதுகுறித்து காதி கிராமத் தொழில் கமிஷன் தலைவர் வினய்குமாரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:- எங்களுக்கு காந்தியை அவமதிக்கும் நோக்கம் எதுவும் இல்லை.காதி மேம்பாட்டுக்கு பிரதமர் மோடியின் பங்களிப்பும் உள்ளது. அவரது நடவடிக்கைகளால் காதி விற்பனை நாடு முழுவதும் 37 சதவீதம் அதிகரித்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.என்றாலும் காதி கிராமத் தொழில் ஊழியர்கள் தொடர்ந்து எதிர்ப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.