அரசு பள்ளி ஆசிரியர்கள் பணி !!

👉🏼ஒரு வருட பள்ளிவேலை நாட்கள் 220

👉🏼 காலை 9மணி முதல் மாலை 4.30வரை கட்டாயம் பள்ளியில் தான் இருக்க வேண்டும்...

👉🏼விடுமுறை நாட்களில் voter list சேர்த்தல், நீக்கல் திருத்தம் பணி வருடத்திற்கு 15 to 30 நாட்கள், ஞாயிறு சிறப்பு முகாம்


👉🏼இது தவிர Aadhar சரிபார்த்தல், Ration card சரிபார்த்தல் பணி

👉🏼அரசு தரும் நலத்திட்டங்களை பள்ளியில் கொண்டு சேர்த்தல்

👉🏼நாடாளுமன்ற , சட்டமன்ற , ஊராட்சி , இடைத்தேர்தல் பயிற்சி (5நாட்கள்)& தேர்தல் பணி (4நாட்கள் 24×7)
குறிப்பு : வெகு தொலைவில்
பணி வழங்கப்படும்

👉🏼தேர்வுத்தாள் திருத்தம், மதிப்பெண்பட்டியல் தயாரித்தல் , தேர்வு முடிவு வெளியீடு

👉🏼பள்ளிகளில் மருத்துவ முகாம் நடத்துதல்...

👉🏼பாடத்திட்டம் தயாரித்தல் , கற்பித்தல் பதிவேடுகள் (50க்கும் மேலாக) பராமரித்தல்...

👉🏼ஒவ்வொரு மாதம்  1அல்லது 2 சனிக்கிழமைகளில் பயிற்சி (விடுமுறைக்கு அனுமதி இல்லை)

👉🏼ஒவ்வொரு வருடமும் பள்ளி சார்ந்த பஞ்சாயத்து அளவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு , பத்து வருடத்திற்கு ஒரு முறை தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு...

👉🏼விழிப்புணர்வு பேரணி நடத்துதல்

👉🏼ஒவ்வொரு வருடமும் குறைந்த பட்சம் 20நாட்கள் கற்பித்தல் பயிற்சி ...

👉🏼தேசிய விழாக்களை பள்ளி அளவில் கொண்டாடுதல் & கிராம சபா கூட்டங்களில் பங்கேற்றல்...

👉🏼ஒவ்வொரு மாத பாடத்தினை முடித்தல் , தேர்வு வைத்தல், குறைதீர் கற்பித்தல்...

👉🏼மாணவர் விவரங்களை ஆன்லைனில் (EMIS) பதிவேற்றுதல்...

👉🏼பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிதல் , மாற்று திறன் குழந்தைகட்கு ஒருங்கிணைந்த கற்றலை அளித்தல்..

👉🏼மாணவர்கட்கு கல்வி உதவித்தொகை பெற்று வழங்குதல்...

👉🏼பிள்ளைகள் நலனில் எதையும் கண்டு கொள்ளாமல் இருக்கும் பெற்றோர்  வெறுங்கையோடு அரசு பள்ளிக்கு வரும் குழந்தைகளை பெற்ற பிள்ளைகள் போல் கருதி அறிவையும், பண்பையும், உழைப்பையும் பயிற்றுவித்து  உதவிக்கு பணத்தையும் அளிக்கும் ஆசிரியர்கள் பலர்...

👉🏼இன்னும் பல பணிகள்.. வாய் புளித்ததா , மாங்காய் புளித்ததோ என அரசு பள்ளி  ஆசிரியர்களுக்கு விடுமுறை அதிகமோ என பகிர்வதை தவிருங்கள்...

👉🏼சமுதாய மாற்றம் விமர்சனத்தால் நிகழும், உண்மை நிலை அறியாமல் வீண் விதண்டாவாதத்தால் அல்ல...

👉🏼ஆசிரியர்கள் தன் வாழ்நாள் முழுதும் கால அட்டவணை படி வாழ்ந்து,  விதைக்கின்றனர் என்பதை மறவாதீர்

நன்றி.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...