இந்திய தபால் துறையில் பேமென்ட் வங்கி சேவையை தொடங்குவதற்கான அனுமதியை ரிசர்வ் வங்கி வழங்கியுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் மதிப்பு நீக்கம் செய்யப்பட்டன. அதன் பிறகு கார்டு மற்றும் டிஜிட்டல் சார்ந்த பரிவர்த்தனைகள் முக்கியத்துவம் பெறத் தொடங்கின. அதன் அடிப்படையில்
அரசாங்கம் சில சலுகைகளை வழங்கியது. மொபைல் வாலெட் நிறுவனங்கள், ஆன்லைன் பரிவர்த்தனைகள் அதிகம் பிரபலமாயின. அதன்பிறகு, பேமென்ட் வங்கி அறிமுகப்படுத்தப்பட்டது. பேமென்ட் வங்கிகளில் ஒரு லட்சம் ரூபாய் வரை டெபாசிட் செய்து கொள்ளவும், பிறகு தேவைப்படும் போது பணம் எடுத்துக் கொள்ளும் வசதிகள் உள்ளன. முதன்முதலாக ஏர்டெல் நிறுவனம் தனது பேமென்ட் வங்கியை அறிமுகம் செய்தது. அதனைத் தொடர்ந்து பே.டி.எம். நிறுவனமும் பேமென்ட் வங்கியை தொடங்கத் திட்டமிட்டுள்ளது. இதற்காக பே.டி.எம் நிறுவனம் ரூ.400 கோடியை முதலீடு செய்துள்ளது. இந்த நிறுவனங்களுக்குப் அடுத்ததாக தபால்துறைக்கு பேமென்ட் வங்கி தொடங்குவதற்கான அனுமதியை ரிசர்வ் வங்கி அளித்துள்ளது.
ரிலையன்ஸ், வோடஃபோன், ஆதித்யா பிர்லா நுவோ, எஸ்.எஸ்.டி.எல் மற்றும் பினோ பெடெக் ஆகிய நிறுவனங்களுக்கு பேமென்ட் வங்கி தொடங்குவதற்கான கொள்கை ரீதியிலான அனுமதி கிடைத்துள்ளது. எனினும் ரிசர்வ் வங்கியின் முழு அனுமதி வழங்கப்படவில்லை. தற்போது தபால் துறைக்கு மட்டுமே முழு அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.