பெங்களூருவில், வெளிநாடுவாழ் இந்தியர் தின மாநாடு நேற்று(7-1-17) தொடங்கியுள்ளது. அதில், கலந்துகொண்டு பேசிய பிரகாஷ் ஜாவடேகர் கூறியதாவது:
உலகத் தரத்தில் 20 பல்கலைக்கழகங்களை அமைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துவிட்டோம். அதற்கான கொள்கை விரைவில்
அறிவிக்கப்படும். அதன்படி, 10 அரசு பல்கலைக்கழகங்களும், 10 தனியார் பல்கலைக்கழகங்களும் உருவாக்கப்படும்.
மத்திய அமைச்சரவை ஒப்புதல்
உயர்தரமான உள்கட்டமைப்பு வசதிகள் கொண்ட பல்கலைக்கழகங்களை உருவாக்குவதற்கு வசதியாக, உயர் கல்விக்கு நிதியுதவி அளிக்கும் அமைப்பு ஒன்றை ஏற்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
அந்த அமைப்பானது, மத்திய மனித வள மேம்பட்டுத் துறை மற்றும் தனியார் பங்களிப்புடன் ரூ.2,000 கோடி முதலீட்டுடன் உருவாக்கப்படும் என்றார் ஜாவடேகர்.