மத்திய பட்ஜெட் தேதியை மாற்றுவது தொடர்பாக மத்திய அரசுக்கு தேர்தல் கமிஷன் கடிதம் எழுதி உள்ளது.
மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ம் தேதி துவங்கி நடக்கும் எனவும், பிப்ரவரி 1 ம் தேதியன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் எனவும் மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் பிப்ரவரி 4 ம் தேதி துவங்கி, மார்ச் 8 ம் தேதி வரை உ.பி., கோவா, பஞ்சாப்
உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் கமிஷன் அறிவித்தது. இதனால் தேர்தலுக்கு முன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யக் கூடாது என எதிர்க்கட்சிகள் போர்க்கொடி உயர்த்தின. இது தொடர்பாக தேர்தல் கமிஷனரையும் சந்தித்து எதிர்க்கட்சியினர் மனு அளித்தனர்.
இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று, தேர்தல் தேதியை மாற்றுவது தொடர்பாக மத்திய அரசுக்கு தேர்தல் கமிஷன் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் கோரிக்கை தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் அந்த கடிதத்தில் கேட்கப்பட்டுள்ளது.