இரு மாணவர்களுக்காக ஒரு ஆசிரியர்!

சீனாவில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் இரண்டு மாணவர்களுக்காக ஒரு ஆசிரியர் பாடம் நடத்திவருவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் சாங்கியுங்-கை அடுத்த யோயாங் கவுண்டியில் தொடக்கப் பள்ளி ஒன்று உள்ளது. இங்கு, இரண்டு மாணவர்கள் மட்டும்தான் பயின்று வருகின்றனர். இங்கு, யாங் ஜின்யுவா என்ற ஆசிரியர், தனது 18 வயதிலிருந்து இந்தப் பள்ளியில் பணியாற்றத்
தொடங்கிய இவருக்கு 53 வயதாகிறது. இவர், தொடக்கப் பள்ளியில் சுமார் 35 ஆண்டுகாலமாக பணியாற்றுகிறார்.

இவருக்கு தலைமையாசிரியர் மற்றும் பிரபல தொழில் நிறுவனங்களில் அதிகாரி பணி போன்றவை கிடைத்தபோதும் அதை வேண்டாம் என்று தவிர்த்துவிட்டு, இந்த தொடக்கப் பள்ளியின் ஆசிரியராகவும் பணியாளராகவும் சமையல்காரராகவும் பணியாற்றி வருகிறார். அந்த இரண்டு மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பது மட்டுமல்லாமல், தினமும் சமைத்து அவர்களுக்கு உணவளித்து வருகிறார்.

இதுகுறித்து ஆசிரியர் யாங் ஜின்யுவா கூறுகையில், ‘மாணவர்களின் முகத்தில் உதிக்கும் புன்னகையைப் பார்க்கும்போது, எனக்கு அதிகமாக பொறுப்புணர்வு இருக்கிறது என்பதை உணர்கிறேன். அதேபோன்று, பள்ளி முடிவடைந்ததும் மாணவர்களை வீட்டுக்கு அழைத்துச் சென்று விடுகிறேன்.

இந்தப் பள்ளிக்கு ஆசிரியர் வரவில்லையென்றால் உடனே பள்ளி மூடப்படும். அப்படி, பள்ளி மூடினால் அந்த இரண்டு மாணவர்களும் 4 கிலோமீட்டர் தொலைவில் அடுத்த கிராமத்திலுள்ள தொடக்கப் பள்ளிக்குச் சென்றுதான் பயில வேண்டும். அதனால், நான் பள்ளிக்கு தொடர்ந்து சென்று வருகிறேன். நகரமயமாதல் காரணமாக,பெரும்பாலான கிராமவாசிகள் நகரத்தை நோக்கிச் சென்றுவிடுகின்றனர். இதனால், கிராமத்தில் குறைந்தளவில்தான் மக்கள் வசித்து வருகின்றனர். சீனாவின் கிராமப்புற பள்ளிகள், மாணவர்கள் இல்லாமல் காலியாக இருப்பதற்கு நகரமயமாதல் ஒரு காரணமாக இருக்கிறது’ என்று கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...